கும்பத்தில் பயணம் செய்யும் சனியும் சுக்கிரனும் பணமழை கொட்டப்போவது எந்த ராசிகளுக்கு?
இது வரைக்கும் மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிரன் தற்போது கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
கும்ப ராசிக்கு சொந்தக்காரராக இருப்பவர் சனிபகவான் எனவே சுக்கரனும் சனிபகவானும் ஒன்றாய் சேர்வதால் சில ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருபவர். இவர் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றி கொள்வார்.
எனவே இந்த சேர்க்கையால் பணமழை கொட்டபோகும் ராசிகள் யார் யார்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
மேஷ ராசியில் சுக்கிரன் 11வது வீட்டில் பயணம் செய்து வருவதால் உங்களுக்கு வருமானம் அதிகமாக கிடைக்கும். நீண்ட காலமாக நீங்கள் முடிக்க வேண்டிய வேலைகள் இனிதே முடியும்.
மாணவர்கள் கல்வி கற்பதில் சிறந்து விளங்குவார்கள். ஒரு விஷயத்தை முடிக்க வேண்டும் என்று நினைத்து எடுத்தால் அது கண்டிப்பாக வெற்றியில் முடியும்.
ரிஷபம்
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் இருக்கிறார் இதனால் அரச வேலையில் இருப்பவர்கள் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.
உங்களுக்கு பூர்வீக சொத்து இருந்தால் அதனால் பயன் கிடைக்கும். வீடு மற்றும் புது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு தேடி வரும்.
மிதுனம்
உங்கள் ராசியில் 9 வது வீட்டில் சுக்கிரன் இருப்பதால் உங்களுக்கு சில அதிஸ்டங்கள் உங்களை தேடி வரும்.
ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் ஒரு விஷயத்தை ஆரம்பித்தால் அது உங்களுக்கு சாதகமாக முடியும். குடும்பத்தில் மங்கள காரியம் நடக்கும்.
கடகம்
உங்கள் ராசியில் சுக்கிரன் 8 வது வீட்டில் இருக்கிறார். அதனால் உடல் ஆரோக்கியம் பலமாக இருக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
நீங்களே எதிர்பார்க்காமல் உங்களை தேடி அதிஸ்டம் வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |