சுக்கிர பெயர்ச்சி.. 2023ம் ஆண்டு இந்த மூன்று ராசிக்கும் அமோகமாக இருக்கும்
சுக்கிரன் ஒளி பொருந்திய கிரகம் சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர்.
சுக்கிர பெயர்ச்சியில் எல்லாக் கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளையும் நிலைகளையும் மாற்றுகின்றன.
சுக்கிரன் தனுசு ராசியில் டிசம்பர் 5ஆம் திகதி இடப்பெயர்ச்சி அடைகிறார். அஸ்தங்கமாகியிருந்த சுக்கிரன் தற்போது உதயமாகியுள்ளார்.
தனுசு ராசியில் பயணம் செய்யப்போகும் சுக்கிரனால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகாரர்களுக்கு நன்மையான பலன்கள் அமையுமா அல்லது தீமையான பலன்களை தருமா என பார்க்கலாம்.
சிம்மம்
2013ம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது, வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதுடன், தொழில் செழிக்கும்.
இதனால் வருமானம் அதிகரிப்பதுடன் குடும்ப கஷ்டங்கள் நீங்கும், நீண்ட நாட்கள் வரன் கிடைக்காமல் கஷ்டப்படும் நபர்களுக்கு நினைத்தபடி வாழ்க்கை அமையும்.
ஏற்கனவே திருமணமான நபர்களுக்கும் குடும்ப பிரச்சனைகள் நீங்கி தம்பதிகள் சிறப்பாக வாழ்வார்கள்.
தனுசு
தனுசு ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதனால், லக்கினாதிபதி யோகம் உருவாகிறது.
ஏற்கனவே புதனும் இருப்பதால் வாழ்வில் வெற்றி தொடங்குகிறது, வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
தொழிலில் வெற்றி கண்டு புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான சூழல் உருவாகும், பழைய சொத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் சரியாகும்.
திருமணம் முடிந்து நீண்ட வருடங்களாக குழந்தைப்பேறு இல்லாமல் இருப்பவர்களுக்கு நிச்சயம் குழந்தைப்பேறு கிடைக்கும்.
கன்னி
சுக்கிரனின் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கும் லக்னாதிபதி யோகம் அமைகிறது, இதனால் தொழில் விருத்தி அடைந்து பணவரவு அதிகரிக்கும்.
இந்த நேரம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமைவதால் வியாபாரத்தில் தாராளமாக முதலீடு செய்தால் கைமேல் நிச்சயம் பலன் உண்டு.
சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளும் சரியாகும், புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்களும், திருமணமான தம்பதிகளுக்கு வாழ்வு மகிழ்ச்சிகரமாகவும் அமையும்.