இளமையாக இருக்க மேற்கொண்ட டயட்... இன்ஸ்டாகிராம் பிரபலம் பரிதாப மரணம்
சமைக்கப்படாத உணவுகள் டயட்டை மேற்கொண்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளமையாக இருக்க டயட்
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஜன்னா சாம்சோனோவா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இளமையாக வாழ்வதற்கு பழங்களை மட்டும் சாப்பிடும் டயட்டை மேற்கொண்டுள்ளார்.
பல ஆண்டுகளாக ஜன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் சமைக்காத சைவ உணவுமுறைகளை பதிவிட்டதுடன், பார்வையாளர்களை சாப்பிட கூறியும் வலியுறுத்தி வந்தார்.
இவரது உணவில் பழங்கள், சூரியகாந்தி விதைகள், பழச்சாறு இவற்றினை மட்டுமே எடுத்துக்கொண்டார். இதனால் இவரது உடல் பலவீனமானதால், இவரது நெருங்கிய நண்பர் இவரின் உடல்நிலையைப் பார்த்து மருத்துவரை அணுக கூறியுள்ளார். ஆனால் ஜன்னா இதனை கண்டுகொள்ளவில்லையாம்.
ஜன்னாவின் தாய் கூறுகையில், தனது மகளின் உடல் நிலை மோசமானதற்கு காரணம், காலரா போன்ற நோய்தொற்று மற்றும் சைவ உணவு முறையால் ஏற்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சமைக்காத உணவை சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என்று அவர் நம்பியதே இந்த துயரத்திற்கு காரணம் என்று கூறியுள்ளார்.
சொந்தமாக டயட் இருப்பது எப்போதும் ஆபத்து என்றும், ஒவ்வொருவரின் உடல்நிலையும் மாறுபடும் என்பதால் ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரை இல்லாமல் இப்படி ஜன்னா போல டயட் இருப்பது தவறு என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |