காதலருடன் செம்பருத்தி சீரியல் நடிகை இருக்கும் புகைப்படம் ரிலீஸ்! யார் அந்த பையன் தெரியுமா?
தமிழ் சின்னத்திரை ரசிகர்களை பெரிது கவர்ந்துள்ள சீரியல்களில் ஒன்று ஜீ தமிழில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல்.
கிராமத்தில் இருந்து வந்து பணக்கார வீடு ஒன்றில் பணி பெண்ணாக சேர்ந்து பின் அந்த வீட்டிற்கே மருமகளாக ஆகும் ஒரு பெண் மற்றும் அவளை சுற்றி நடக்கும் திருப்பங்கள் மற்றும் நிகழ்வுகளை மையமாக கொண்ட இந்த சீரியலில் பணிப்பெண் மற்றும் மருமகள் என 2 விதமான நடிப்பை திறம்பட வெளிப்படுத்திய ஷபானா ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார்.
இதனிடையே ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகர் ஆர்யனை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகை ஷபானா மற்றும் நடிகர் ஆர்யன் இருவருமே இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கின்றனர்.
தங்களை பற்றிய கிசுகிசுக்களை உறுதி செய்யும் வகையில் இருவரும் அவ்வப்போது போஸ்ட்களை ஷேர் செய்வர். என்றாலும் கூட இருவரும் தங்களது காதல் குறித்து இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
காதலிப்பதாக கூறப்பட்டாலும் இதுவரை இருவரும் சேர்ந்து இருக்கும் எந்த ஒரு ஃபோட்டோவும் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது முதல் முறை இருவரும் சேர்ந்து நின்று எடுத்து கொண்ட ஃபோட்டோ ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.