வரிக்குதிரையிடம் மிதிவாங்கி அசிங்கப்பட்ட சிங்கம் !
ஆப்ரிக்கா நாட்டில் காட்டில் வரிக்குதிரை ஒன்று சிங்கத்தை எட்டி உதைத்து அசிங்கப்படுத்திய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் ஒரு வரிக்குதிரை தனக்கு இரை தேடி வந்து வந்து கொண்டிருக்கிறது. அப்பகுதி முழுவதும் வளர்ந்த காய்ந்த புல்வெளிகளாக இருக்கின்றன.
அந்த புல்வெளிக்குள் ஒரு சிங்கம் ஒன்று பதுங்கியிருக்கிறது. முதலில் அந்த சிங்கம் இருப்பது அந்த வீடியோவில் தெரியவில்லை.
அப்பகுதி வழியாக வந்த வரிக்குதிரை சிங்கத்தை கண்டு திருப்பி தலை தெறிக்க ஓடுகிறது. வரிக்குதிரை தன்னை கண்டு கொண்டதை அறிந்த சிங்கம் அந்த வரிக்குதிரையின் மீது பாய்கிறது.
இதை எதிர்பார்த்த அந்த வரிக்குதிரை தன்னை பின்னால் பிடிக்க வரும் சிங்கத்தை தன் பின்னங்காலால் எட்டி உதைக்கிறது.
இதில் வரிக்குதிரையிடம் மிதிவாங்கிய சிங்கம், கீழே விழுந்துவிடுகிறது.இதனால் அந்த வரிக்குதிரை சிங்கத்திடமிருந்து தப்பி விடுகிறது.
இந்த வீடியோ ஏராளமானோரின் லைக்குகளை பெற்று வருகிறது.