மீண்டும் அணிக்குள் நுழைகிறாரா? யுவராஜ் சிங் - அவரே வெளியிட்ட வைரல் வீடியோ
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் 2011 உலககோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல மிகவும் உறுதுணையாக இருந்தவர்.
அப்போது, தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றவர். அந்த அளவிற்கு இவரின் விளையாட்டை ரசிக்காத ரசிகர்களே இல்லை.
கிரிக்கெட் போட்டியில், இருந்து ஓய்வு பெற்ற இவர், மீண்டும் கிரிக்கெட் மட்டையை கையில் பிடித்து களம் காண்பார் என்பது போல் சூசகமான மெசேஜை பகிர்ந்து ஷாக் ஆக்கியுள்ளார்.
அந்த இன்ஸ்டா வீடியோவில், “இட் இஸ் டைம் ஃபார் மை செகண்ட் இன்னிங்ஸ்” என்று கூறியுள்ளார், 2-வது இன்னிங்ஸுக்குத் தயார் என்று அவர் கூறுவது கிரிக்கெட் மட்டையை மறுபடியும் பிடித்து களமிறங்குகிறாரா?
அல்லது புதிய அணியில் எதுவும் பயிற்சியாளராக இணைகிறாரா என்பது சரியாகத் தெரியவில்லை. சொல்லப்போனால், ஐபிஎல் அணியில் விளையாட்டு வீரராகவும் சேர்வார் என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.