இருந்தாலும் வந்திருக்கலாம்.. இதை காரணமாக வைத்து தான் திருமணத்திற்கு வராமல் இருந்தாரா யுவன்?
பிரேம்ஜி- இந்து திருமணத்திற்கு யுவன் சங்கர் ராஜா வராமல் போனதற்கான காரணத்தை செய்யாறு பாலு ஓபனாக பேசியுள்ளார்.
பிரேம்ஜி- இந்து திருமணம்
தடபுடலாக நடந்து முடிந்த பிரேம்ஜி திருமணம்.. சீதனம் குறித்து சர்ச்சையை கிளப்பிய பயில்வான் -பரபரப்பு பேச்சு!
தமிழ் சினிமாவில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் பிரபலமானவர் தான் நடிகர் பிரேம்ஜி அமரன்.
இவர் கடந்த ஜூன் 9ம் தேதி திருத்தணியில் இந்து என்கிற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.
எளிமையான முறையில் திருமணம் நடக்கும் என வெங்கட் பிரபு அறிக்கை வெளியிட்ட நிலையில் முன்னணி நடிகர்கள் மாத்திரம் கலந்து கொண்டிருந்தனர்.
பின்னர் மணமக்கள் வரவேற்பு நிகழ்வு ஆடம்பரமாக நடந்ததாக கூறப்படுகின்றது.
திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த பொழுது, புகைப்படத்தில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் ஏன் வரவில்லை? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
யுவன் ஏன் திருமணத்திற்கு வரவில்லை..
தடபுடலாக நடந்த நடிகர் சார்லியின் மகன் திருமணம்... மு.க.ஸ்டாலின், இளையராஜா உள்பட பல பிரபலங்கள் பங்கேற்பு!
இந்த நிலையில் ரசிகர்கள் ஆடிப்போகும் படி செய்யாறு பாலு சில விடயங்களில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதாவது, “ இளையராஜா திருமண நாளன்று ஒரு கச்சேரிக்கு சென்று விட்டார். அதனை தவிர்க்க முடியாமல் தான் இளையராஜா திருமணத்திற்கு வரவில்லை. யுவன் துபாயில் இருக்கிறார். இதனால் அவருக்கும் திருமணத்திற்கு வர முடியவில்லையாம்.
மேலும் யுவனுக்கு என்ன வேலையாக இருந்தாலும் தன்னுடைய தம்பி திருமணத்திற்கு வந்திருக்கலாம். யுவனுக்கும் பிரேம்ஜிக்கு அப்படி என்ன பகை என்று தெரியவில்லை.
ஒரு வேளை, யுவன் இஸ்லாம் மதத்தை தற்போது தழுவி வருகின்றார். பிரேம்ஜி - இந்து திருமணம் பிராமண முறைப்படி கோயிலில் நடந்த காரணத்தினால் யுவனால் வரமுடியாமல் இருந்தாரோ தெரியவில்லை” என பேசியிருக்கிறார்.
செய்யாறு பாலு இப்படி பேசியதை யுவன் ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |