தடபுடலாக நடந்த நடிகர் சார்லியின் மகன் திருமணம்... மு.க.ஸ்டாலின், இளையராஜா உள்பட பல பிரபலங்கள் பங்கேற்பு!
பிரபல நடிகர் சார்லி மகன், அஜய் தங்கசாமியின் திருமண வரவேற்பு நேற்று நடந்த நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சார்லி
1983 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுனமாகவர் தான் நடிகர் சார்லி
காமெடி கலந்த துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் சார்லி இதுவரை 800இற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் விஜய்யுடன் 'காதலுக்கு மரியாதை', 'கண்ணுக்குள் நிலவு', அஜித்துடன் 'அமர்க்களம்', போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
சமீப காலமாக கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், சார்லியின் மகன் அஜய் தங்கசாமியின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின், இளையராஜா, கமல்ஹாசன், உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |