''தளபதி 68'' முதல் பாடல் குறித்து விளக்கமளித்த யுவன்- ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் விஜயின் 68 திரைப்படத்தின் முதல் பாடல் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பதிலளித்துள்ளார்.
தளபதி 68
விஜயின் 68 ஆவது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.
இந்தத்திரைப்படத்தை தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இந்தப்படத்தில் இடம் பெறும் விஜயின் பிரேயத்யக லுக்கிற்காக அமெரிக்கா சென்று இருக்கும் படக்குழு அங்கு விஜயை விஎஃப்க்ஸ் மூலம் ஸ்கேன் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரையரங்கு ஒன்றில் ‘தி ஈக்வலைசர் 3' படத்தின் முதல் காட்சியை விஜய் கொண்டாடி பார்த்து ரசித்தார். இது தொடர்பான புகைப்படத்தையும் இயக்குநர் வெங்கட் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
Welcome to the future!!! #Thalapathy68 @actorvijay @archanakalpathi pic.twitter.com/snWrqMEjfU
— venkat prabhu (@vp_offl) August 31, 2023
யுவனின் பதில்!
இந்த நிலையில் இந்தப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அண்மையில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார்.
அப்போது அவர் தளபதி 68 படம் தொடர்பான அப்டேட் கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த யுவன் தளபதி 68 படத்தின் முதல் பாடல் தரலோக்கலாக இருக்கும் என்று பதிலளித்து இருக்கிறார். இந்தப்படத்தில் நடிகை ஜோதிகா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
#Thalapathy68 first song will be a ????? ????? ????? Song ?? - Yuvan at SRM College #Panacea23 pic.twitter.com/NRyFlXAgfM
— Vijay_ Karthik ?? (@Karthik_VFC2) September 3, 2023