கனா காணும் காலங்கள் நடிகரின் தற்போதைய நிலை? காட்டு தீயாய் பரவும் புகைப்படம்
கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் ஜோ, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வியப்படை வைத்துள்ளது.
கனா காணும் காலங்கள் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த யுதன் பாலாஜி சின்னத்திரையை விட்டு சிறிதுக்காலம் விலகியிருந்தார்.
இந்த சீரியல் 90ஸில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்தமானது. அந்த காலப்பகுதியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்திலும் இருந்தது.
இதில் நடித்த கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது, இவர்களின் யதார்த்தமான நடிப்பால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.
மேலும் கனா காணும் காலங்கள் சீரியலில் வரும் கதையம்சம் சென்டிமென்ட், காதல், குடும்பம், நண்பர்கள், கலாட்டா என பல்வேறு வகையிலும் எடுக்கப்பட்டது.
தீயாய் பரவும் புகைப்படம்
இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலாஜி பட்டாளம் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
பட்டாளம் திரைப்படத்திலுள்ள கதையம்சம் கனா காணும் காலங்கள் சீரியல் போன்று காணப்படும். இறுதியில் பாலாஜி இறப்பது போன்று காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் தற்போது பாலாஜி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் இவர் ஆளே மாறி விட்டார் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.