Viral video: ரீல்ஸ் எடுக்க சென்ற யூடியூபருக்கு நேர்ந்த கதி.. அருவியில் அடித்து செல்லப்படும் காட்சிகள்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த யூடியூபர் ஒருவர், டுடுமா அருவியை காணொளி எடுக்க முயன்ற போது அடித்துச் செல்லப்பட்ட காட்சி இணையவாசிகளை கண்கலங்க வைத்துள்ளது.
யூடியூபர் உயிரிழப்பு
இந்தியா- ஒடிசா மாநிலத்தை சேர்ந்த யூடியூபரான சாஹர் டுடூ (22). தன்னுடைய சேனலுக்கு புது புது இடங்களுக்கு சென்று காணொளி எடுத்து போடுவது வழக்கம்.
அப்படி தான் டுடுமா அருவியின் அழகிய இயற்கை காட்சியை எடுப்பதற்காக கேமராவுடன் தண்ணீருக்குள் இறங்கியுள்ளார்.
அவர் உள்ளே சென்று சில நொடிகளில் மேலே இருந்து நீர் ஓட்டம் திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு வர ஆரம்பித்துள்ளது.
இதனால் பதற்றமடைந்த சாகர், ஒரு அடிக் கூட எடுத்து வைக்க முடியாமல் அருவி நடுவில் உள்ள பாறையில் சிக்கிக் கொண்டார்.
கதறிய அழுத நண்பர்கள்
இந்த நிலையில், கரையில் இருந்து சாஹரை பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள் அவரை கயிறு மூலம் காப்பாற்றி விடலாம் என முயற்சி செய்தார்கள்.
அப்போது வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர்களின் முயற்சி பெரிதாக பயனளிக்கவில்லை. அதன் பின்னர், நீர் மட்டம் உயர்ந்த போது சாஹரால் தாக்கு பிடிக்கமுடியாமல் சாகர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
தன்னுடைய நண்பர் தன் கண் முன்னே அடித்துச் செல்லப்படும் காட்சியை பார்த்த நண்பர்கள் அவருடைய பெயரை கூறி கூறி கதறுகிறார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இளைஞர் தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
The video is reportedly from Koraput, where a YouTuber was swept away by strong currents at Duduma Waterfall.
— Manas Muduli (@manas_muduli) August 24, 2025
People must exercise extreme caution while filming and never put their lives at risk.
Such a tragic incident. pic.twitter.com/8hHemeWv2e
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
