போன் பேசிய இளைஞர் திடீரென மரணித்த சோகம்! மாரடைப்பு ஏற்பட காரணம் என்ன?
தெலுங்கானாவின் காமரெட்டி மாவட்டத்தில் 5 நாட்களில் 4 பேர் மாரடைப்பால் இறந்துள்ளது அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பு
தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்நகர் காலனியைச் சேர்ந்தவர் கோன் சந்தோஷ்(33). இவர் தனது வீட்டில் போனில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனே குடும்பத்தினர் இவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் குடும்பத்தினர் நண்பர்கள் என அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் கடந்த 5 நாட்களில் மட்டும் இம்மாவட்டத்தில் 4 பேர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ள தகவலும் வெளியாகியுள்ளது.
மாரடைப்பு ஏற்பட காரணம் என்ன?
எந்தவொரு செயலையும் பதற்றமின்றி, மனஅழுத்தமின்றி செய்ய பழகிக்கொண்டாலே இதயத்துக்கு நல்லது. மனஅழுத்தத்தின் விளைவாக உயரும் ரத்தஅழுத்தம் மாரடைப்புக்கு கம்பளம் விரிப்பது போலத்தான்.
மவுனத்தை கடைபிடித்து, நிதானமாக செயல்பட்டால் மனஅழுத்தம் இன்றி வாழலாம். ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மூலைக்கு மூலை துரித உணவு கடைகள் அணிவகுத்து நிற்கும் இந்தக்காலத்தில், சமச்சீரான உணவுப் பழக்கத்தை நம்மில் பலரும் முற்றிலும் மறந்துவிட்டோம்.
குறிப்பாக இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் 'நவநாகரிக உணவு' என்ற பெயரில் வரும் உணவுகளை சாப்பிடவே அதிகம் விரும்புகிறார்கள்.
இதனால் உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்ந்து மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.
உடல் பருமனும், தொடர்ந்து சேரும் கொழுப்பும் மாரடைப்பை ஏற்படுத்தலாம்.