'ஊ சொல்றியா மாமா' பாடலால் ஏற்பட்ட சண்டை! எரிந்து சாம்பலான கடை
புஷ்பா படத்தின் பாடலான ஊ சொல்றியா மாமா என்ற பாடலால் செல்போன் கடை ஒன்று பெட்ரோல் குண்டு வீச்சுக்கு இரையானது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஊ சொல்றியா மாமா
புஷ்பா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் ஊ சொல்றியா மாமா என்ற பாடல் தான். ஆண்ட்ரியாவின் குரலும், சமந்தாவின் கவர்ச்சியான நடனமும் ரசிகர்களை சொக்க வைத்தது.
மதுரையில் செல்லூர் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த முகம்மது சலீம் என்ற இளைஞர் அண்ணா பேருந்து நிலை பகுதியில் உணவகம் ஒன்றில் ஒரு ஆண்டுக்கு முன்பு வேலை செய்துள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்ற முகம்மது, வேறு இடத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது நேற்றைய தினம் எதார்த்தமாக பழைய கடைக்கு வந்து நின்று பேசிக் கொண்டிருந்தார்.
பெட்ரோல் குண்டு வீச்சு
அப்பொழுது அருகே இருந்த செல்போன் கடையில் ஊ சொல்றியா மாமா என்ற பாடல் போட்ட நிலையில், அதனை சத்தம் அதிகமாக வைக்கக் கோரியுள்ளார். அத்தருணத்தில் மதுபோதையில் முகம்மது இருந்துள்ளார்.
மேலும் சத்தம் அதிகமாக வைக்கவில்லையெனில் பெட்ரோல் குண்டு வீசிவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். பின்பு சிறிது நேரத்தில் பெட்ரோல் குண்டுடன் வந்த முகம்மது மறுபடியும் சத்தம் அதிகமாக வைக்க வாக்குவாதம் செய்துள்ளார்.
செல்போன் கடை இளைஞர் இதனை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், திடீரென உணவகத்தில் இருந்து பெட்ரோல் குண்டை பற்றவைத்து செல்போன் கடையில் போட்டுள்ளார்.
இதில் கடையின் முன்பகுதி எரிந்து சாம்பலான நிலையில், இளைஞர் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் எஸ்கேப் ஆகியுள்ளார்.