12 வயது பள்ளி மாணவியை 10 முறை கத்தியால் குத்திய இளைஞர்! தாய் கண்முன்னே அரங்கேறிய துயரம்
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் 12 வயது பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் 10 முறை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒருதலை காதல்
மகாராஷ்டிரா மாநிலம், கல்யாண் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா காம்ப்ளே(20). இவர் அப்பகுதியைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவியை ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் தாய் ஆதித்யா காம்ப்ளேவை கண்டித்துள்ளார். இந்நிலையில், மாணவி நேற்று மாலை பள்ளியை முடித்துவிட்டு அங்கிருந்து டியூசன் சென்றுவிட்டு தாயாருடன் வீட்டிற்கு சனெ்றுள்ளார்.
அப்போது மாணவியின் வீட்டின் அருகே மறைந்திருந்த ஆதித்யா திடீரென வந்து சிறுமியின் தாயை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனையடுத்து தாயின் கண்முன்னே 10 முறை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
In Kolsewadi area of #Kalyan a mentally unstable man killed a 12-year-old girl by stabbing her five to six times and later tried to commit suicide by drinking phenyl but was caught by the police.
— Free Press Journal (@fpjindia) August 17, 2023
By: Prashant Narvekar#Mumbai #Mumbainews #Crime #FPJ pic.twitter.com/WIkt6hil7f
ரத்த வௌ்ளத்தில் சரிந்த சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து பினாயிலைக் குடித்து ஆதித்யா தற்கொலைக்கு முயன்றதால் அவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமுதிக்கப்பட்டுள்ளார்.
பொலிசார் குறித்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |