மிளகாய் பொடி தூவி 4 லட்ச ரூபாய் கொள்ளை
இந்தியாவில் மிளகாய் பொடி தூவி வங்கியில் ரூ.4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள எஸ்பிஐ கிளை வங்கிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
வங்கியின் வேலை முடியும் நேரம் மாலை 6 மணியளவில் நபர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார்.
நேராக Cash Counterக்கு சென்றவர் தன் பையில் வைத்திருந்த மிளகாய் பொடியை அங்கிருக்கும் அதிகாரிகள் மீது தூவினார்.

கண் எரிச்சலால் அதிகாரிகள் நிலைகுலைய அங்கிருந்த 4 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.
அவர் ஆரஞ்ச் நிற குர்தாவும், கருப்பு நிற பைஜாமாவும் அணிந்திருந்தார், இக்காட்சிகள் சிசிடிவி கமெராவில் பதிவாக போலிசார் தீவிர விசாரணையை தொடர்ந்தனர்.
இதனையடுத்து தேடுதல் வேட்டைக்கு பின்னர் 30 நிமிடங்களில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 4 லட்ச ரூபாய் பணம் மீட்கப்பட்டது.
