இளைஞரின் உயிரைப் பறித்த சிக்கன் ப்ரைடு ரைஸ்! மக்களே எச்சரிக்கை
சென்னையில் இளைஞர் ஒருவர் சிக்கன் பிரைடு சாப்பிட்டு இரவில் தூக்கி நிலையில், காலையில் உயிரிழந்து காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கன் ரைஸ்
இன்றைய தலைமுறையினரின் உணவுப்பழக்கங்கள் அனைத்தும் அதிகமாகவே மாறியுள்ள நிலையில் அதிகமாக ஃபாஸ்ட் புட் உணவுகளையே விரும்பி சுவைத்து வருகின்றனர்.
இதனால் இம்மாதிரியான உணவகங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், வண்ண வண்ண விளக்குகளுடன் ஜொலிப்பது மட்டுமின்றி, இங்கு கூட்டமும் அலைமோதுகின்றது.
இவ்வாறு நுடுல்ஸ், ரைஸ், சிக்கன் என அடிமையாகியுள்ள நிலையில், சில தருணங்களில் பல அசம்பாவிதங்களும் அரங்கேறுகின்றது.
ஆம் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை இளைஞர்
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த மகாவிஷ்ணு (21). பிசிஏ பட்டதாரியான இவர் நேற்று தனது நண்பர் ராம்குமார் என்பவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஹொட்டல் சென்றுள்ளார்.
அங்கு நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, சிக்கன் ப்ரைடு ரைஸ் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.நேற்று இரவு அவரது நண்பர் ராம்குமார் என்பவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஹோட்டல் ஒன்றில் நண்பர்கள் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
பின்பு நண்பர் வீட்டிலேயே உறங்கிய நிலையில், காலை வெகுநேரம் ஆகியும் எழும்பாமல் இருந்த விஷ்ணுவை நண்பர் எழுப்பியுள்ளார். அப்போது எந்தவொரு அசைவும் இல்லாமல் இருந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனே விஷ்ணுவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
தற்போது விஷ்ணுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.