உடற்பயிற்சி முடிந்து அமர்ந்த இளைஞர்: மாரடைப்பால் சரிந்து விழும் காட்சி! பிரபல நடிகரா இவர்?
இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.
பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்துவிட்டு, படியில் அமர்ந்து தண்ணீர் அருந்தி முடித்துள்ளார்.
அப்பொழுது அவருக்கு உடல்நிலை அசாதாரணமாக காணப்படுவது போன்று காட்சியில் தெரிகின்றது. பின்பு படியில் அமர்ந்திருந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஆனால் குறித்த இளைஞர் யார் என்று தெரியாத நிலையில், நேற்றைய தினத்தில் திடீரென மாரடைப்பினால் உயிரிழந்த இளம் நடிகர் சித்தார்த் சுக்லா என்று கூறி வருகின்றனர்.
இந்த காணொளி கடந்த மாதம் 25ம் திகதி நடந்த சம்பவம் என்றும், குறித்த நடிகர் நேற்றைய தினத்தில் உயிரிழந்ததால் இது ஒரு பொய்யான தகவல் என்று தெளிவாகியுள்ளது.