கைகளை வைத்தே உங்க ஆரோக்கியத்தை தெரிஞ்சிக்கலாம்... எப்படினு தெரியுமா?
ஒருவரது உடல் ஆரோக்கியத்தினை அவர்களின் கைகளைப் பார்த்து எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மனித உடம்பில் முக்கியமான உறுப்பாக பார்க்கப்படுவது கை ஆகும். எந்தவொரு வேலையாக இருந்தாலும், நாம் நமது கைகளைக் கொண்டு ஆரம்பிக்கின்றோம்.
அவ்வாறு வேலை செய்ய முக்கியமாக பயன்படும் கைகள் நமது ஆரோக்கியத்தை குறித்தும் வெளிக்காட்டும் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
கல்லீரல், தைராய்டு போன்ற பிரச்சனைகளை நமது கைகளின் தோற்றத்தினை வைத்தே கண்டு பிடித்துவிட முடியும். அதனை விரிவாக தெரிந்து கொள்வோம்.

image: © Evan-Amos / Wikimedia Commons
கைகள் காட்டும் ஆரோக்கியம்
ஒருவரது கைகள் அடர் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால் கல்லீரல் பிரச்சனையாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. ஆனால் கர்ப்பிணியின் கைகள் சிவப்பாக இருப்பது சாதாரணமாதாக பார்க்கப்படுகின்றது.
பெண்களுக்கு மோதிர விரல் ஆள்காட்டி விரலை விட நீளமாக இருந்தால், ஆஸ்டியோபோராசிஸ் தொந்தரவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகின்றது.
கை விரல்கள் எப்பொழுதும் குளிர்ச்சியாக காணப்பட்டால், தைராய்டு தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

விரல்கள் எப்பொழுதும் வீக்கமாக இருந்தால் ஹைப்போ தைராய்டிசம் இருக்கும் என்றும், அதுவே தைராய்டு சுரப்பில் ஹார்மோன்கள் குறைவாக சுரக்கப்பட்டால் மெட்டாபாலிசம் குறைந்து, கைகள் வீக்கமாக காணப்படுமாம்.

image: © Wesalius / Wikimedia Commons
நகங்கள் வெளிர் நிறத்தில் அல்லது வெள்ளையாக இருந்தால் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகை ஏற்படுவதாக அர்த்தம்.

image: © Wesalius / Wikimedia Commons
நமது கை நகங்களுக்கு கீழே சிவப்பு நிற கோடுகள் காணப்பட்டால், ரத்தத்தில் நோய் தொற்றோ அல்லது இதய வால்வுகளில் ஏதேனும் தொந்தரவு ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.
அதுவே கை விரல் நுனி நீல நிறத்தில் காணப்பட்டால் இரத்த ஓட்டம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், மருத்துவரிடம் கட்டாயம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |