கால் விரல்கள் காட்டிக் கொடுக்கும் ஆளுமை பண்பு... நீங்க எப்படி?
நமது காலில் விரல்கள் இருக்கும் அளவினை வைத்து அவர்களது ஆளுமை பண்புகள் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒருவரின் தோற்றம், உருவத்தில் சில அமைப்புகள் உள்ளிட்ட சில விஷயங்களை வைத்தும் இதனை தெரிந்து கொள்ள முடியுமாம். அந்த வகையில் தற்போது Foot Shape குறித்து ஒரு நபரின் ஆளுமையை தெரிந்து கொள்வோம்.
ரோமன் ஃபுட் ஷேப்
காலில் முதல் மூன்று விரல்கள் நீளத்தில் ஒன்றாகவும், நான்காவது மற்றும் ஐந்தாவது விரல் நீளம் குறைவாக இருக்கும் பாதம் தான் ரோமன் ஃபுட் ஷேப். இவ்வாறான அமைப்பை உடையவர்கள் அதிக நட்பு குணமுடையவர்களாகவும், சுற்றியிருக்கும் நபர்களையும் சூழலையும் அதிகம் விரும்புவராக இருப்பார்கள். வலுவான தலைமைத்துவ உணவு கொண்ட இவர்கள் வேலையில் தனித்துவமாக இருப்பார்கள். மற்றவர்களை பார்த்து எதையும் செய்யத் தயங்கும் இவர்களின் நல்ல சிந்தனை மற்றும் எண்ணம் இவர்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்.
ஸ்கொயர் ஃபுட் ஷேப்
கால் விரல்கள் அனைத்தும் ஒரே நீளத்தில் இருக்கும் அமைப்பை கொண்டிருக்கும் இவர்கள், பொறுப்பாளராகவும், கடின உழைப்பாளியாகவும் இருப்பதுடன், பிரச்சினையை சிறந்த முறையில் தீரு்வு காணும் இவர்கள், வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இவர்களை அடித்துக் கொள்ள முடியாதாம். நேரத்தை நிர்வகிப்பதிலும் புத்திசாலியான இவர்கள் பொறுமை மற்றும் விடாமுயற்சி இவற்றினால் இலக்கை அடைவதிலும் சிறப்பாக செயல்படுவார்கள்.
கிரீக் ஃபுட் ஷேப்
கால் பாதத்தில் முதல் விரலை விட இரண்டாவது விரல் மட்டும் நீளமாக இருக்கும் அமைப்பை கொண்ட இவர்கள், படைப்பாற்றல் மிகுந்தவராக இருப்பதுடன், ஆற்றல் மிகுந்த சுறுசுறுப்பான நபராகவும் காணப்படுவார்கள். சவால்களையும் எளிதில் எதிர்கொள்வதுடன், தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். நம்பியவர்களுக்கு முழு ஆதரவும் கொடுப்பீர்கள்.
எகிப்தியன் ஃபுட் ஷேப்
கால் விரல்கள் ஐந்தும் சாய்வாக அதாவது 45 டிகிரி கோணத்தில் சாய்வாக இருந்தால் எகிப்தியன் ஃபுட் ஷேப் என்று கூறப்படுகின்றது. இப்படிப்பட்டவர்கள் சுதந்திரமாக செயல்பட விரும்புவதோடு, பிடிவாத குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள். உங்களுக்கு உடன்படாத விடயங்களை செய்ய மாட்டீர்கள். முடிவெடுப்பதில் சிறந்தவராக இருக்கும் நீங்கள், நெருக்கமானவர்களிடம் விசுவாசமாகவும் இருப்பீர்கள். ரகசியங்களைக் காப்பாற்றி உறுதிமொழிகளை பின்பற்றுவதிலும் சிறந்தவர். உங்களது பிரச்சினை மட்டுமின்றி மற்றவர்கள் உங்களிடம் கூறும் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமாக தீர்வு கொடுப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |