வீடியோ காலில் உங்களது முகம் இன்னும் அழகாக காட்ட வேண்டுமா? வாட்ஸ் அப்பில் புதிய அம்சம்
வாட்ஸ் அப் வீடியோ காலில் உங்களது முகத்தை இன்னும் அழகாக காட்டுவதற்கு புதிய அம்சம் ஒன்று வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்
இன்றைய காலத்தில் ஸ்மார்ட் வைத்திருக்கும் மக்கள் பெரும்பாலும் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்தாலும் முகம் பார்த்து பேசுவதற்கு வீடியோ கால் உதவியாக இருக்கின்றது.
அதிலும் வாட்ஸ் அப் செயலிகள் பல அம்சங்களை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது. யூசர்களின் அனுபவத்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்த புதிய அம்சத்தினை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பின் வீடியோ அழைப்பை மேம்படுத்த புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் அதன் யூசர்களின் வீடியோ அழைப்புகளை மேம்படுத்த பியூட்டி மோட் என்ற புதிய அம்சத்தை சேர்த்துள்ளது. இதன் காரணமாக உங்கள் வீடியோ அழைப்பு இன்னும் மேம்படுத்தப்படுகிறது. குறித்த அம்சத்தை எவ்வாறு இயக்குவது என்பதை தெரிந்து கொள்வோம்.
வாட்ஸ் அப் பியூட்டி மோட்
வீடியோ அழைப்புகளின்போது உங்கள் முகத்தை அழகாக காட்ட புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வீடியோ அழைப்புகளின் போது முகத்தில் உள்ள டார்க் சர்கிள், கறைகள் மற்றும் பேட்சஸ் குறைகளை சரி செய்து முகத்தை அழகாக காட்டுகின்றது.
பியூட்டி மோட் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கிறது. முதலில் பிளே ஸ்டோர் (ஆன்ட்ராய்டு) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (iOS)லிருந்து வாட்ஸ்அப் இன் சமீபத்திய வெர்ஷனை அப்டேட் செய்து கொள்ளவும்.
தனி நபரோ அல்லது குழு அழைப்போ எதுவாக இருந்தாலும், வாட்ஸ்அப்பை ஓபன் செய்து வீடியோ அழைப்புகளை ஸ்டார்ட் செய்யவும்.
குறித்த வீடியோ அழைப்புகளின்போது, ‘லோ லைட் மோட்’ ஆப்ஷன்க்கு அடுத்ததாக ஃபேஸ் மாஸ்க் போன்ற ஐகானை பார்க்க முடியும்.
குறித்த ஐகானை கிளிக் செய்தால், பியூட்டி மோட் செயல்படத் தொடங்கும். இன்னும் சிறந்த தோற்றத்தினை பெறுவதற்கு, இந்த அம்சத்தை ப்ளர் பேக்கிரவுண்ட் ஆப்ஷன் உடன் இணைக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |