ரியல் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் பெண்! வைரல் காணொளி இதோ
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் பெண் ஒருவர் பேருந்து சாரதியாக பணிபுரியும் காட்சி வைரலாகி வருகின்றது.
கோவை மாவட்டம் காந்திபுரம், சோமனூர் வழியில் தனியார் பேருந்தில் சாரதியாக ஷர்மிளா என்ற பெண் பணியாற்றி வருகின்றார்.
இவரது காணொளி இணையத்தில் கடும் வைரலாகி வருகின்றது. குறித்த பெண் 7ம் வகுப்பு படிக்கும் போதே கனரக வாகனங்களை இயக்குவதற்கு அதிகமாக ஆர்வம் இருந்துள்ளது.
இதனால் தற்போது முறையான பயிற்சி மேற்கொண்டு அதற்கான உரிமத்தையும் பெற்றுள்ளார். இதற்கு முழுவதும் அவரது தந்தை உதவியாக இருந்ததுடன், கோவையில் முதல் கனரக பெண் ஓட்டுனர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
குறித்த பெண் பேருந்து பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்த போது நகைப்புடன் ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் இன்று வியப்பாக பார்க்கிறார்கள். ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் அரசு வேலைக்காக காத்திருக்காமல், தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி களத்தில் இறங்கியுள்ளார்.
காணொளியினை இங்கே அழுத்திப் பார்க்கவும்...