ஓசியில் குடித்துவிட்டு சாலை பொலிஸாரிடம் அலப்பறை செய்த இளம்பெண்! ஆடிப்போய் நின்ற நெட்டிசன்கள்
சென்னையில் இளம் பெண்ணொருவர் குடித்து விட்டு பாதையிலிருக்கும் பொலிஸாருடன் சண்டையிட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொலிஸாரின் நடவடிக்கை
இந்தியாவில் சென்னை மாநகர பகுதியில் இரவில் பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பாதையில் ஓரமாக இளம் பெண்ணொருவர் பைக்கை நிறுத்தி விட்டு அழுதுக் கொண்டு நின்றுள்ளார்.
இதனை பார்த்த பொலிஸார் குறித்த பெண்ணை அழைத்து வந்து எவ்வளவு குடித்துள்ளார் என்பதனை அறிந்து கொள்ளும் கருவியை வைத்து பரிசோதித்துள்ளனர்.
குறித்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், பலூன் ஊதுவதை போல் ஊதுங்கள் அப்போது தான் உங்களை வீட்டிற்கு அனுப்புவோம் என்று கூறியுள்ளனர்.
இதனால் பெண்ணும் வீட்டிற்கு அனுப்புவார்கள் என நினைத்து ஊதினார். அப்போது குறித்த கருவிளை இவர் அதிகம் குடித்திருப்பதை காட்டியுள்ளது.
அலப்பறை செய்த பெண்
இந்நிலையில் பொலிஸார் பெண்ணின் சாரதி அட்டையை கேட்டுள்ளனர்.
இதன்போது கோபமடைந்த பெண்,“ ஆமாம் நான் ஓசியில் தான் குடிக்க சென்றேன். தினமும் குடித்து செல்வேன் எனக்கு ஏன் ஃபைன் போடுகிறீர்கள்” என சாலையை மறைத்து ஆர்பாட்டம் செய்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் குறித்த பெண்ணை கடுமையாக திட்டியப்படி கமண்ட்க்களை பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.