இளம்பெண்ணை கொலை செய்து இதயத்தை சாப்பிட்ட இளைஞர்... பின்பு அடுத்தடுத்து 3 பேருக்கு அரங்கேறிய கொடூரம்
ஒரு பெண்ணைக் கொலை செய்து அவரது இதயத்தை எடுத்து, உருளைக்கிழங்குடன் சமைத்துச் சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள ஆக்லஹோமா என்ற நகரில் வசித்து வருபவர் பால் ஆண்டர்சன்(42),. இவரது அண்டை வீட்டில் வசிக்கும் பெண் ஆண்ட்ரியா லின் பிளாங்கென்சி.
இவரை கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி ஆண்டர்சன் தனது வீட்டில் வைத்துக் கொலை செய்ததுடன் அவரது இயதயத்தை வெளியே எடுத்து அதை உருளைக்கிழங்குடன் சமைத்து தனது குடும்பத்தினருக்குப் பரிமாறியுள்ளார். மேலும் அப்பெண்ணைக் கொலை செய்துவிட்டுத் தனது வீட்டுற்கு வந்த ஆண்டர்சன் தன் மாமா(67) மற்றும் அவரது பேத்தியைக் கொலை செய்ததோடு, அத்தையின் கண்களையும் கத்தியால் குத்தியுள்ளார்.
இதுகுறித்து தவலறிந்து வந்த பொலிசார், மாமனார் சடலமாகவும், குழந்தை பயங்கர காயத்துடனும் இருந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு குழந்தையையும், அத்தையும் கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தை பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அத்தை மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளார்.
பொலிசார் ஆண்டர்சனை கைதுசெய்து விசாரித்த போது, மூடநம்பிக்கையின் பொருட்டு பேய் பிசாசை விரட்ட இவர் பெண்ணைக் கொன்று அவரது இதயத்தை சாப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இவர் ஏற்கெனவே போதை மருத்து கடத்தல் குற்றத்திற்காக 9 ஆண்டுகளாக சிறைத்தண்டனை பெற்று வந்த நிலையில், தற்போது ஜாமீனில் வெளிவந்து அத்தை மாமாவுடன் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.