நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் திடீர் உயிரிழப்பு
விநாயகர் சதுர்த்தி அன்று கொண்டாட்டத்தின் போது நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென சுருண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் மரணம்
கொரோனாவிற்கு பின்பு மாரடைப்பினால் இளைஞர்கள் உயிரிழக்கும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் மக்களும் பெரும் பயத்தில் இருந்து வருகின்றனர்.
உணவு பழக்கம், வேலை பளு உள்ளிட்டவறை முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்று கூறினாலும், சரியான காரணம் என்ன என்பது பலருக்கும் தெரியவதில்லை.
இந்நிலையில், ஆந்திரா மாநிலம் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் தர்மவரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலையை வைத்து மூன்று நாட்கள் பூஜை நடப்பது வழக்கமாக இருந்துள்ளது.
இதில் நடன நிகழ்வும் நடைபெற்ற நிலையில், சினிமா பாடல் ஒன்றிற்கு பிரசாத் என்ற 27 வயது இளைஞர் நடினமாடிய போது திடீரென தடுமாறி விழுந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அவரது நண்பர்கள் உடனே தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |