உங்களது வாட்ஸ் அப்பில் உடனடியாக இதை நிறுத்திடுங்க! அதிலும் நம்பர் 4 மிகவும் முக்கியம்
இன்று உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தக்கூடிய சமூகவலைத்தளம் வாட்ஸ் அப், நண்பர்களுடன் அரட்டையடிக்க, புகைப்படங்கள்/வீடியோக்களை அனுப்ப, தொழில்ரீதியான கல்வி ரீதியான குழுக்கள், நேரடியாக பார்த்து பேச என பல வகைகளிலும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது.
உங்களது போன் நம்பர் ஒருவரிடம் இருந்தாலே போதும், அவர் மிக எளிதாக உங்களுடன் உரையாடலை தொடங்கலாம்.
இதேவேளை ஹேக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம்.
எனவே உங்களது வாட்ஸ் அப்பை மிக பாதுகாப்பாக பயன்படுத்துவது அவசியம், இந்த பதிவில் அதற்கான வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
1. உங்களுடன் தொடர்பில் இல்லாத நபர்களின் எண்களை போனில் இருந்து நீக்கிவிடுவது நல்லது, ஒரு சில வேளைகளில் பணிநிமித்தமாக பேச வேண்டும் என்றால் வேலை முடிந்தவுடன் நீக்கிவிடுங்கள், குப்பை போல் எண்களை சேமித்துக் கொள்ள வேண்டாம்.
2. உங்களது profile photo வை அனைவரும் பார்க்கும் வண்ணம் வைக்க வேண்டும், Everyone, My Contacts, மற்றும் Nobodyஎன்ற 3 ஆப்ஷன்களில் My Contacts என்பதை செலக்ட் செய்வதே சிறந்தது, உங்களது Contactsல் இருப்பவர்களால் மட்டுமே பார்க்க முடியும்.
3. தேவைப்படின் நீங்கள் வைக்கும் statusயும் யார் பார்க்க வேண்டும் என்பதில் லிமிட் செய்து கொள்ளலாம், உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்றால் அவர்களுக்கு மட்டுமே தெரியும்படி லிமிட் செய்யலாம்.
4. ‘Two-step verification’ -யை செட் செய்து கொள்வது முக்கியம், இது மற்றவர்கள் அவர்களது போனில் உங்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதில் இருந்து தடை செய்யும்.
5. வாட்ஸ்அப்பில் வரும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பைல்கள் அதுவாகவே பதிவிறக்கம் செய்து கொள்வதை நிறுத்தி வைக்கலாம், உங்களுக்கு தேவைப்பட்டால் மட்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
6. iCloud அல்லது Google Driveல் auto chat backup-யும் நிறுத்திவைத்துக்கொள்ளலாம், முக்கியமான உரையாடல்களை வேறொரு இடத்தில் நீங்களாகவே சேமித்துவைத்துக் கொள்வதே சிறந்தது.