அப்பா ஆனார் நடிகர் யோகிபாபு: உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்
நடிகர் யோகிபாபு- மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் யோகிபாபு.
இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களில் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார். இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி வேலூரைச் சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை குலதெய்வ கோயிலில் எளிமையாக திருமணம் செய்தார்.
இத்தம்பதிகளின் வரவேற்பு மார்ச் மாதம் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது யோகிபாபு மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் திரைத்துறை நண்பர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.