மூச்சு வாங்க, வாங்க கடுமையாக உடற்பயிற்சி செய்யும் யோகிபாபு - இணையதளத்தில் வைரல்!
மூச்சு வாங்க, வாங்க கடுமையாக உடற்பயிற்சி செய்யும் யோகிபாபுவின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நகைச்சுவை நடிகர் யோகிபாபு
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன் பின்னர், இவருக்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. சில படங்களில் நடிகர் யோகிபாபு கதாநாயகனாக கூட நடித்துள்ளார்.
சமீபத்தில் ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கு தன்னுடைய பேட் ஒன்றை பரிசாக அளித்தார். அந்த பரிசை வாங்கிய யோகிபாபு அந்த பேட்டிற்கு முத்தம் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானது.
கடுமையாக உடற்பயிற்சி செய்யும் யோகிபாபு
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு மூச்சு வாங்க, வாங்க கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.