முதுகு வலியால் தொடர்ந்து அவதியா? இந்த யோகாசனத்தை மட்டும் செய்யுங்க அனைத்து வலியும் பறந்துபோகும்!
பொதுவாக உடல் வலி பிரச்சினை என்றால் பலரும் மருத்துவரை தேடி அலைகிறோம். ஆனால், சரியான உடற்பயிற்சி செய்தால் அனைத்து வலிகளும் பறந்து போகும்.
இதனால், தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது, மற்றும் உறக்க நிலை சரியாக இல்லாமல் இருந்தால் இதுபோன்ற முதுகு வலி பிரச்சினைகள் உண்டாகும்.
அதிலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முதுகு வலியை எதிர்கொள்கின்றனர். சரி, முதுகு வலி என்பது தீராத பிரச்சனை கிடையாது.
சப்ட மத்சிந்த்ராசனா (Two-Knee Spinal Twist)
இந்த ஆசனம் செய்யும் போது தரையில் படுத்தபடி உங்கள் முழங்கால்களை மடக்கி கொண்டு வந்து உடலின் பாதியளவில் வைக்கவும். அடுத்து, தரையில் உள்ள கைகள் உங்கள் பக்கமாக இருக்க வேண்டும்.
நீங்கள் தரையில் இறங்கும்போது உடல் தசைகள் அனைத்தும் வலுவடைந்து நீட்டும். இந்த பயிற்சி முதுகெலும்பு மற்றும் முதுகில் இயக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
இவை உங்கள் முதுகெலும்பு, முதுகு மற்றும் தோள்களை விரிவடையச் செய்யும். இந்த யோகா பயிற்சி செய்வது உங்கள் முதுகு, இடுப்பில் வலி மற்றும் விறைப்பைப் போக்க உதவும். முறையான யோகாசனங்கள் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து வந்தாலே இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து இயற்கையாகவே விடுபடலாம்.
சலம்ப புஜங்காசனா (Sphinx Pose)
இந்த ஆசனம் என்பது, ஆரம்ப நிலைக்கு ஏற்ற முதுகு வலியை போக்க உதவும் யோகாவாகும். இது வயிற்று தசைகளை நீட்டி, முதுகெலும்பை பலப்படுத்துவதுடன் பிட்டத்தை உறுதிப்படுத்துகிறது. இது மார்பு, நுரையீரல் மற்றும் தோள்களை நீட்டி திறக்கிறது. மேலும், உடலை உற்சாகப்படுத்துவதுடன், நரம்பு மண்டலத்தை சீரமைக்கும், சோர்வுக்கான சிகிச்சையாகவும் இந்த யோகா அமைகிறது.
ஆசன முறை
முதலில் கால்களை நீட்டி குப்புற படுக்கவும், உங்கள் கிழ் முதுகு பிட்டம் மற்றும் தொடைகளின் தசைகளில் அழுத்த இருக்க வேண்டும். மெதுவாக உங்கள் மேல் உடற்பகுதி மற்றும் தலையை உயர்த்தவும்.
பின்னர், முதுகுக்கு ஆதரவாக உங்கள் கீழ் வயிற்றை மெதுவாக உயர்த்தவும். மேலும், கீழ் முதுகில் ஈடுபடுவதற்கு பதிலாக, முதுகெலும்பு வழியாகவும், உங்கள் தலையின் வழியாகவும் உயர்த்துவதை உறுதி செய்க.
இந்நிலையில், நீங்கள் முழுமையாக ஓய்வெடுக்கும்போது உங்கள் பார்வையை நேராக முன்னோக்கி வைக்கவும், அதே நேரத்தில் சுறுசுறுப்பாகவும் ஈடுபடவும். 3 நிமிடங்கள் வரை அதே நிலையில் இருங்கள்.
பாலாசனா (Child Pose)
ஓய்வெடுக்க மற்றும் உங்கள் கழுத்து, முதுகில் பதற்றத்தை விடுவிக்க சரியான வழியாகும். சைல்டு போஸ் உங்கள் இடுப்பு, தொடைகள் மற்றும் கணுக்கால்களையும் விடுவிக்கிறது.
இந்த பயிற்சி செய்வது மன அழுத்தம் மற்றும் சோர்வைப் போக்க உதவும்.ஆசன முறை உங்கள் முழங்கால்களை ஒன்றாக வைத்து குதிகால் மீது உட்கார்ந்து கொள்ளுங்கள்.
ஆதரவுக்காக உங்கள் தொடைகள், உடல் அல்லது நெற்றியின் கீழ் போர்வையைப் பயன்படுத்தலாம். இதன் பின்னர் முன்னோக்கி வளைந்து உங்கள் கைகளை உங்களுக்கு முன்னால் வைக்கவும்.
பின்னர், நெற்றியை தரையில் மெதுவாக வைக்கவும்.
அடுத்து, கைகளை உங்களுக்கு முன்னால் நீட்டவும் அல்லது உங்கள் உள்ளங்கைகளை உயர்த்தி உடலுடன் கைகளை வைக்கவும். 3 நிமிடங்கள் வரை இருங்கள். இந்த மூன்று யோகாசனங்களும் முதுகு வலியை போக்க பெரிதும் உதவும்.