திடீரென்று ஏ.ஆர்.ரஹ்மான் காலில் விழுந்த பிரபல பாடகர்.....ஷாக்கில் உறைந்த அரங்கம்! தீயாய் பரவும் வீடியோ
பிரபல ராப் பாடகர் யோயோ ஹனிசிங் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் காலில் விழுந்து வணங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அபுதாபியில் நடைபெற்று வரும் ஐஐஎஃப்ஏ விருது வழங்கும் விழாவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேடையில் நடனமாடிய பஞ்சாபி ராப் பாடகர் ஹனிசிங், மேடையிலிருந்து இறங்கி வந்து பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் கால்களில் விழுந்து வணங்கினார்.

ராப் பாடகர் யோயோ உருக்கம்
இதேவேனை, காலில் விழுந்து வணங்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாடகர் ஹனிசிங் பகிர்ந்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் முன்பு பாடியது எனது வாழ்க்கையின் முக்கியமான தருணம் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
@asliyoyo now I've started following you bro ?@arrahman ? #GodofMusic#honeysingh pic.twitter.com/enczQfElCB
— Freddie Liger ☆ | ARR (@FreddieVijayDev) June 3, 2022