கர்ப்பிணிக்கு பெண் உறுப்பில் மஞ்சள் நிற திரவம் வெளியேறுகின்றதா? அலட்சியம் வேண்டாம்... பேராபத்து கூட நிகழும்!
கர்ப்பகாலத்தில் யோனி வெளியேற்றம் என்பது சாதாரணமானது. ஆனால் அவை வெளியேறும் நிறத்தை பொறுத்து அதன் பின்னணியில் உள்ள சரியான காரணங்களை கவனித்து தேவையெனில் சிகிச்சை அளிக்க வேண்டும்.
அப்படி வெளியேறும் யோனி திரவம் மஞ்சள் நிறமாக வந்தால் அதை கவனிக்க வேண்டும்.
அதற்கு காரணங்களும் சிகிச்சை முறைகளும் குறித்து அறிவோம்.
கர்ப்பகாலத்தில் மஞ்சள் வெளியேற்றம் என்பது சாதாரணமா?
கர்ப்பகாலத்தில் மெல்லிய, பால் நிற வெள்ளை, இலேசான மஞ்சள் மற்றும் இலேசான துர்நாற்றம் வீசுவது இயல்பானது. இது லுகோரியா என்று அழைக்கப்படுகிறது. கர்ப்பம் முன்னேறும் போது இவை அதிகரிக்க கூடும்.
பொதுவான ஏற்ற இறக்கமான ஹார்மோன்களால் இவை உண்டாகிறது.
சில நேரங்களில் கர்ப்பிணி பெண்கள் வெளிர் மஞ்சள் நிற நீரை பெறுவது இலேசான அல்லது இனிமையான வாசனையை கொண்டிருக்கலாம்.
இது அம்னோடிக் திரவத்தின் கசிவாக இருக்கலாம். இது கர்ப்பிணிக்கு இறுதி மாதங்களில் உண்டாகும் பிரசவத்தின் சாத்தியமான அறிகுறியாகும்.
தொற்றுநோயாக இருந்தால் அதன் அறிகுறி
சிறுநீர் கழிக்கும் போது அரிப்பு, துர்நாற்றம், புண் மற்றும் வலியுடன் மஞ்சள் நிற தோனி வெளியேற்றம் இருந்தால் அது தொற்றுநோயாக இருக்கலாம்.
இந்த அறிகுறிகள் உடல்நல பிரச்சனை அல்லது தொற்றுநோயை குறிக்கவில்லை என்றாலும் வெளியேற்றத்தின் காரணத்தை கண்டறிந்து தேவையெனில் அதற்கான சிகிச்சை மேற்கொள்வது இவை தீவிரமாகாமல் தடுக்க முடியும்.
கர்ப்பகாலத்தில் திரவ வெளியேற்றத்துக்கு காரணம் பொதுவாக ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பது தான். மஞ்சள் நிற திரவம் வெளியேற்றத்துக்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
ஈஸ்ட் தொற்று
யோனி ஆரோக்கியமாக இருக்க பிஹெச் ஈரப்பதம் மற்றும் பாக்டீரியா சமநிலை ஆகியவற்றின் உகந்த நிலைமைகள் தேவை.
இந்த நிபந்தனைகளில் ஒன்று குறைந்தாலும் அது தொற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம்.
அதிகரித்த பாலியல் செயல்பாடு, நுண்ணுயிர் எதிர்ப்புகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அழுக்கு படிந்த கைகள் மோசமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஏற்படுத்தும். கேண்டியாஸிஸ் என்பது பொதுவான ஈஸ்ட் தொற்று ஆகும்.
இது சிறுநீர் கழிக்கும் போது அரிப்பு, வீக்கம், புண், சிவத்தல் மற்றும் எரியும் உணர்வுடன் மஞ்சள் அல்லது வெள்ளை நிற வெளியேற்றத்தை உண்டு செய்கிறது.
பாக்டீரியல் வஜினோசிஸ்
இது ஒரு பாக்டீரியா ஏற்றத்தாழ்வு காரணமாக ஏற்படுகிறது. நல்ல பாக்டீரியா யோனியில் உள்ள கெட்ட பாக்டீரியாவை கட்டுப்படுத்துகிறது.
இது தலைகீழாக மாறும் போது அது மஞ்சள் அல்லது பச்சை வெளியேற்றத்தை அடர்த்தியான மற்றும் துர்நாற்றம் வீச செய்யும். மேலும் இது யோனி வலி மற்றும் எரியும் உணர்வுடன் தொடர்பு கொண்டுள்ளது.
பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள்
அசாதாரண யோனி வெளியேற்றத்துக்கான பொதுவான காரணங்கள் மற்றும் சரியான நேரத்தில் அவை சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மற்ற எஸ்டிஐ என்னும் தொற்று ஆபத்தை உண்டாக்க வாய்ப்புண்டு.
முக்கியமாக எஸ்டிஐ என்னும் வகைகளில் ட்ரைக்கோமோனியாசிஸ் கிளமிடியா மற்றும் கோனேரியா போன்றவை அடங்கும்.
இடுப்பு அழற்சி நோய்
எஸ்டிஐ அல்லது பாக்டீரியா நோய்த்தொற்றுகள் சிகிச்சையளிக்கப்படாமல் போகும் போது , தொற்று கருப்பை, கருப்பை ஃபலோபியன் குழாய்களுக்கு விரைவில் பரவுகிறது.
இதன் விளைவாகவே மஞ்சள் வெளியேற்றம், இடுப்பு பரிசோதனையின் போது வலி, குமட்டல், சோர்வு மற்றும் வலிமிகுந்த சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.
கர்ப்பகாலத்தில் மஞ்சள் நிற திரவம் வெளியேற காரணங்களில் சுகாதாரமற்ற உள்ளாடைகளை அணிவதன் மூலமும் கூட இந்த வெளியேற்றம் உண்டாகலாம்.
மஞ்சள் திரவத்துக்கு சிகிச்சை
ஈஸ்ட் தொற்றுகள் பூஞ்சை காளான் மாத்திரைகள், க்ரீம்கள், களிம்புகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகின்றன. பாக்டீரியா மற்றும் பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் கர்ப்பகாலத்தில் வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கர்ப்பிணிக்கு பாதுகாப்பாக கருதப்படும் நுண்ணுயிர் எதிர்ப்புகளுடன் சிகிச்சையளிக்கப்படுகின்றன. சிகிச்சையின் காலம் தொற்றின் அறிகுறியை பொறுத்தது.
இதை அலட்சியம் செய்தால் இடுப்பு அழற்சி நோய் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும். சிகிச்சையின் போக்கை சமாளிக்கவும் அதை தடுக்கவும் சரியான பராமரிப்பு அவசியம்.
யோனியில் மஞ்சள் திரவம் வெளியேறுவதை தடுப்பது எப்படி?
யோனி பகுதியை சுத்தமாக வைத்திருங்கள். ஒவ்வொரு முறை இயற்கை உபாதை கழித்த பிறகும் வெற்று நீரில் சுத்தமாக கழுவி விடுங்கள். அதிக சூடான நீரை பயன்படுத்த வேண்டாம்.
இது சாதாரண பாக்டீரியா நிலைகளை மாற்றி ஈஸ்ட் தொற்றுகளை அதிகரிக்க செய்யும். வாசனை சோப்புகள், ஸ்ப்ரேக்கள் மற்றும் இறுக்கமான உள்ளாடைகளை தவிர்க்கவும்.
பருத்தி மற்றும் சுத்தமான உள்ளாடைகளை அணிவது அவசியம். அந்த பகுதியை கழுவுவதற்கு ரசாயனங்கள் பயன்படுத்த கூடாது. யோனி பகுதியில் அரிப்பு ஏற்பட்டால் அதிகமாக சொரிய வேண்டாம்.
இது நிலைமையை மோசமாக்கும். ஊட்டச்சத்து உணவு, தண்ணீர் குடிப்பதன் மூலம் யோனி ஆரோக்கியம் மட்டுமல்ல உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது.
