ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி: கடலில் செய்த நம்பமுடியாத சாதனை
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள 12 வயது சிறுமி ஒருவர் கடலில் 36 கி.மீ நீந்து சாதனை படைத்துள்ளார். கடற்படை வீரர் மதன் ராய் என்பவரின் மகள் ஜியா ராய் (12), ஆட்டிசத்தால் (மன இறுக்க கோளாறு) பாதிக்கப்பட்ட இவர், நீச்சல் பயிற்சியில் கைத்தேர்ந்தவர். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடலில் நீந்தி சாதனை படைக்க விரும்பினார், இதன்படி மும்பை பாந்தரா- வொர்லி கடல் பகுதியில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நீந்த தொடங்கினார்.
சுமார் 8 மணிநேரம் 40 நிமிடத்தில் 36 கி.மீ தூரம் நீந்தி மதியம் 12.30 மணியளவில் மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியை வந்தடைந்தார். இந்த நிகழ்ச்சியை, மகாராஷ்டிரா நீச்சல் சங்கம், மத்திய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் உடல் தகுதி இந்தியா இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தியது.
ஜியா ராய்க்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பை கேட் வே ஆப் இந்தியா பகுதியில் நேற்று நடைப்பெற்றது. மும்பை நீர் விளையாட்டு சங்கத்தின் தலைவர் திருமிகு. ஜரிர் என் பாலிவாலா பரிசு கோப்பையை வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.