நீ தான் என் தேவதை.. உன்னை விரைவில் சந்திப்பேன்: மறைந்த தோழி பற்றி யாஷிகா உருக்கம்
'கவலை வேண்டாம்', 'துருவங்கள் பதினாறு', 'ஜோம்பி' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.
சமீபத்தில், நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வேகமாக சென்றபோது, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் உள்ள சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்ததில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்தார்.
அவருடன் பயணம் செய்த இரண்டு பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது, யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி(28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நடக்க முடியாமல் கஷ்டப்படும் யாஷிகாவுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மறைந்த தோழி குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ள யாஷிகா, என்னுடைய தோழி, நீ இல்லாமல் நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன, உன்னை அதிகம் அதிகமாக மிஸ் செய்கிறேன்.
நீ தான் என் தேவதை, மேலிருந்து என்னை பார்த்துக் கொண்டிருக்கிறாய், நீ இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது, உன்னை விரைவில் சந்திப்பேன் என பதிவிட்டுள்ளார்.
