ஒரு பக்கம் ரொம்ப வேதனையாக இருக்கு... மருத்துவமனையில் இருந்து யாஷிகாவின் உருக்கம்!
நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி இரவு தன் தோழி பவானி, நண்பர்கள் இருவருடன் டின்னருக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பினார்.
கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கார் விபத்துக்குள்ளானது. இதில் பவானி உயிரிழந்தார். இதில், படு காயமடைந்த யாஷிகா சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. இன்னும் 5 மாதங்களுக்கு தன்னால் நடக்க முடியாது என்றும், படுத்த படுக்கையாகத் தான் இருக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் தெரிவித்தார் யாஷிகா.
இந்த நிலையில், தான் எஸ்.ஜே. சூர்யாவுடன் சேர்ந்து நடித்த கடமையை செய் படம் குறித்து ட்வீட் செய்துள்ளார் யாஷிகா. அந்த ட்வீட்டில் யாஷிகா கூறியிருப்பதாவது, ஒரு பக்கம் வாழ்க்கை உணர்வற்று, வேதனையாக இருக்கிறது. மறுபக்கம் வாழ்க்கை போய்க் கொண்டு தானே இருக்கும்...
பல ஆண்டு கடின உழைப்புக்கு பிறகு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்ததற்கு நன்றி எஸ்.ஜே. சூர்யா என தெரிவித்துள்ளார்.
One side life is very numb and hurting . And the other side life must go on ..
— Yashika Anand (@iamyashikaanand) September 8, 2021
.
It took many years of hardwork to reach till here ?? #KadamaiyaiSei #staytuned thankyou @iam_SJSuryah for being a pillar ❤️ pic.twitter.com/tZXvPYfsgR