பேஷன் ஷோவில் கலந்துகொண்ட யாஷிகா ஆனந்த் - ராம் வாக் செய்த போலீசாருக்கு வந்த சோதனை!
தமிழ் சினிமாவில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின் ஒரு சில படங்களில் நடுத்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார்.
இவர், தன்னுடைய ரசிகர்களுக்கும், இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ்க்கும் அவ்வப்போது கவர்ச்சி உடையில் தோன்றி தரிசனம் கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
ராம்ப் வாக் செய்த யாஷிகா
இந்நிலையில், சமீபத்தில் யாஷிகா ஆனந்த் அவர்கள் பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கிறார். சென்னை மயிலாடுதுறையில் நடைபெற்ற தனியார் நிறுவனம் நடத்திய ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யாஷிகா பங்குபெற்று ராம்ப் வாக் நடந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்கிறார்.
இதில் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பலரும் ராம்ப் வாக் நடந்து இருக்கிறார்கள். பின் சிறுவர், சிறுமியர், இளம் வயதினர், திருமணமான பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்று ராம்ப் வாக் சென்றனர்.
அப்போது, நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக வந்திருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரும், நான்கு காவலர்களும் ராம்ப் வாக் செய்தனர்.
பணியிடை மாற்றம்
தற்போது, இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனதை தொடர்ந்து சிலர், போலீஸ் உடையில் இந்த மாதிரி ராம்ப் வாக் நடப்பதா? என சரமாரியான கேள்விகளை எழுப்ப பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது.
இதனையடுத்து, மயிலாடுதுறையில் பணிபுரிந்த மூன்று பெண் போலீஸ், நான்கு ஆண் போலீசை வெவ்வேறு பிரிவுகளில் பணி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது ஒழுங்கு நடவடிக்கைக்காக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
