உயிரோடு இல்லை…. கஷ்டமாக இருக்கிறது! யாஷிகாவின் தோழியின் சகோதரி வெளியிட்ட நெஞ்சை உருக்கும் பதிவு
பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரும், திரைப்பட நடிகையுமான யாஷிகா ஆனந்த், காரில் அதிவேகமாக சென்றபோது நடந்த இந்த விபத்து சம்பவத்தில், யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் படுகாயம் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் யாஷிகா ஆனந்தின் தோழியான வள்ளிசெட்டி பவானி பரிதாபமாக உயிரிழந்தார்.
சாஃப்ட்வேர் இன்ஜினியராக அறியப்படும் வள்ளிசெட்டி பவானி, அமெரிக்காவில் பணிபுரிந்துள்ளார். அவர்தான் கார் விபத்துக்கு முன்பு, கடைசியாக யாஷிகா காரை ஓட்டிச் செல்லும் வீடியோவை எடுத்ததாகவும் குறிப்பிட்டு ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இதேபோல் வள்ளிசெட்டி பவானி யாஷிகாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் வள்ளிசெட்டி பவானியின் மரணம் குறித்து அவரது சகோதரி, “வள்ளிசெட்டி பவானி பத்தி இன்ஸ்டாகிராமில் என்னிடம் கேட்கிறீர்கள்.
உண்மையில் நாங்கள் அனுபவிக்கும் சூழ்நிலையை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. ஜீரணிக்கவே கஷ்டமாக இருக்கிறது. அவர் இப்போது உயிரோடு இல்லை. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். உங்கள் இரங்கலுக்கு நன்றி” என்று தமது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.