புடவையில் ஜொலிக்கும் நடிகையா இது? கவுனில் வெண்ணிலா வெளியிட்ட புகைப்படம்
வெண்ணிலவாக நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்ற நட்சத்திரா குட்டிசேரி, வெள்ளித்திரையில் நடித்து, உடனே சின்னத்திரையிலும் நுழைந்துள்ளார்.
கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர், தமிழில் நடிப்பதற்கு முன்பே மலையாளத்தில் இரண்டு படங்கள் நடித்துள்ளார். பின்பு சினிமாவில் சிறந்த வாய்ப்புகளை தேடி சென்னைக்கு ந்த இவர் ‘கிடா பூசாரி மகுடி’ என்ற படத்தில் அறிமுகமானார்.
அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ராம்தேவ் என்பவர் நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் சரிவர வாய்ப்பு அமையாததால் சீரியல் பக்கம் கவனத்தை செலுத்தினார் நட்சத்திரா.
தற்போது யாரடி நீ மோகினி சீரியலில் மிகவும் சாதுவாக வலம்வரும் இவர் உண்மையாகவே பயங்கர வாயடி மட்டுமில்லாமல் துறுதுறு என்று இருப்பாராம்.
குறித்த சீரியலில் பாவடை தாவணி, புடவையில் வந்த இவர் தற்போது கவுன் ஒன்றினை போட்டு ஹாயாக நடந்து வரும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இவரது ரசிகர்கள் குறித்த புகைப்படத்திற்கு லைக்ஸை குவிப்பதுடன், அழகை புகழ்ந்தும் வருகின்றனர்.