இறந்தவர்களின் சாம்பலில் சூப்... குடும்பமாக குடிக்கும் பழங்குடியினர்! இதன் பின்னணி காரணம் என்ன?
Yanomami Tribe Drink Human Ashes Soup: தென் அமெரிக்காவில் வாழும் பழங்குடியினர் மிகவும் வினோதமான சடங்கினை பின்பற்றி வருவது விசித்திரமாக உள்ளது.
யனோமாமி பழங்குடியினர்
ஒவ்வொரு பகுதியில் இருக்கும் மக்கள் தங்களுக்கென தனித்துவமான பழக்கங்களையும், பாரம்பரியங்களையும் கடைபிடிப்பது வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் பழங்குடி இன மக்கள் கடைபிடிக்கும் பழக்கம் சற்று விசித்திரமாகவே இருக்கும். ஆனால் தென் அமெரிக்காவில் வாழும் யனோமாமி பழங்குடி இன மக்களைக் குறித்து பல விடயங்களை தெரிந்து கொள்வோம்.

image: adobe stock
வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் வாழ்ந்து வரும் இந்த பழங்குடி இன மக்கள் தங்களது மரபுகளையும், இயற்கையின் மீதும், ஆன்மீகத்தின் மீதும் அதிக பற்று கொண்டவர்கள்.
இந்த மக்களுக்கு ஒருவரின் மரணம் என்பது அவரது வாழ்க்கை முடிவிட்டது என்று அர்த்தமில்லையாம்... மாறாக ஆன்மா மற்றொரு பயணத்தினை தொடங்கும் என்று நம்புகின்றனர்.

காட்டில் வைக்கப்படும் இறந்த உடல்
இறந்தவர்களுக்கு சிறப்பு இறுதி சடங்குகள் நடத்தப்படவும் செய்கின்றது. தங்களது இனத்தில் ஒருவர் இறந்துவிட்டால் இறுதி சடங்கினை உடனடியாக செய்யாமல், காட்டில் உள்ள இலைகள் மற்றும் கிளைகள் கொண்டு உடலை மூடி ஒரு இடத்தில் வைக்கின்றனர்.
இவ்வாறு வைக்கப்படும் உடலை சில காலத்திற்கு பராமரிக்கவும் செய்து, ஒரு பகுதியாக எஞ்சியிருக்கும் எச்சங்களை சேர்த்து பின்பு உடலை தகனம் செய்கின்றனர்.

தகனம் செய்யப்படும் உடலின் சாம்பலை கவனமாக சேகரித்து வைப்பது இவர்களது பாரம்பரியம் ஆகும். பின்பு வாழைப்பழத்தில் தயாரிக்கப்படும் சூப் ஒன்றுடன் இந்த சாம்பலை கலந்து குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் என அனைவரும் பருகுகின்றனர்.
மானுடவியல் சொற்களில் இந்த பழக்கத்தினை அகநரமாமிச உண்ணல் என்று அழைக்கப்படுகின்றது. இவர்கள் இதனை உணவுக்காக செய்யாமல், இறந்தவர்களுடன் இருக்கும் தொடர்பினை பேணுவதற்கு இவ்வாறான பாரம்பரியத்தினை கடைபிடிக்கின்றனர்.

சாம்பலில் சூப் எதற்காக?
இவர்களது இந்த பழக்கம் வெளி உலகிற்கு கொடூரமாக தெரிந்தாலும், இந்த இன மக்கள் இதனை அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாகவே பார்க்கின்றனர்.
அதாவது இறந்தவரின் ஆன்மா சாந்திய அடைவதற்கும், அவரது உடலை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வதற்கும் இவ்வாறு செய்கின்றனர்.
மேலும் இறந்தவர் தங்களது குடும்பத்தில் ஒருவராக மாறிவிடுவதாகவும், மேலும் இறந்த ஆத்துமாவிற்கு முறையாக அளிக்கப்படும் பிரியாவிடை என்றும் இவ்வாறு இறுதிசடங்கு செய்தால் தான் ஆன்மா சாந்தி அடையும் என்ற நம்பிக்கையில் இந்த சடங்கினை புனிதமாக செய்து வருகின்றனர்.
ஒரு கலாச்சாரத்திற்கு விசித்திரமாக தோன்றும் ஒருவரது வழக்கம், மற்றொரு கலாச்சாரத்திற்கு அவை மிகவும் புனிதமாகவே பார்க்கப்படுகின்றது என்பதற்கு Yanomami இன பழங்குடிமக்கள் எடுத்துக்காட்டாக இருக்கின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |