யானைப்பிரியரா நீங்கள்? இதோ யால தேசிய பூங்கா பற்றி தெரிஞ்சுக்கோங்க
இயற்கை எழில் கொஞ்சும் அழகிய திருநாடான இலங்கையில் யானைகள் சரயாலயமான யால சயாலம் காணப்படுகின்றது.
யால தேசிய பூங்கா
இலங்கையில் அனேகமான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க கூடிய இடம் தான் இந்த யால தேசிய பூங்கா. ஐந்து பிரிவுகளைக் கொண்ட இத்தேசிய வனத்தில் இரண்டு பிரிவுகளே பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன.
யால தேசிய வனம் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இருக்கிறது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இக்காடு மொத்தமாக 979 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது.
இங்கு ஏராளமான விலங்குகள் காணப்படுகின்றது.இக்காடு முக்கியமாக வடகிழக்குப் பருவப் பெயர்ச்சியின் போதே மழையைப் பெறுகிறது. இவ்வனம் ஈரலிப்பான பருவப் பெயர்ச்சிக் காடுகள், நன்னீர் ஈரநிலங்கள் மற்றும் கடல்சார் ஈரநிலங்கள் போன்ற பல்வேறு வகையான சூழலியற் பகுதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
இதை தவிர இது ஒரு அரைகுறை வறல் வளையம்.இத்தேசிய வனத்தினுள்ளேயே பௌத்த புனிதப் பயணத் தலங்களான சிதுல்பாகுவ மற்றும் மகுல் விகார ஆகிய இரண்டும் அமைந்துள்ளன. இதை தவிர இங்கு அரியவகை கண்டல் தாவரங்களும் காணப்படுகின்றது.
இங்கு இலங்கை யானை உட்பட 44 முலையூட்டி இனங்கள் வாழ்கின்றன. இக்காடு உலகில் அதிக எண்ணிக்கையான சிறுத்தைகள் வாழிடங்களில் ஒன்றாகும். இதன் முதலாம் பிரிவில் 25 தனிச் சிறுத்தைகள் அலைவதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
யால தேசிய வனத்தில் காணப்படும் யானைகளின் எண்ணிக்கை 300-350 ஆகும். இங்குள்ள யானைகளின் எண்ணிக்கை பருவ காலங்களுக்கேற்ப மாறுபடுவதுண்டு.
இங்கு வாழும் முலையூட்டிகளில் இலங்கைப் பனிக்கரடி, இலங்கைச் சிறுத்தை, இலங்கை யானை, காட்டு நீரெருமை ஆகியன அழிவை எதிர்நோக்குவனவாகும். இந்த இடத்தை சுற்றி பார்ப்பதற்கு விலங்குப்பிரியர்கள் தாராளமாக செல்லலாம். இதை பார்வைஇடச் செல்பவர்கள் இயற்கையின் மத்தியில் பூக்காவில் ஓய்வெடுக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |