இரண்டு செல்ஃபி கேமராவுடன் Xiaomi 14 Civi... முன்பதிவு செய்தால் இலவசம் என்ன தெரியுமா?
Xiaomi 14 Civi ஸ்மார்ட்போன் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் விலை மற்றும் சிறப்பம்சம், முன்பதிவு பற்றின தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
Xiaomi 14 Civi
Xiaomi நிறுவனம் இன்று விலை உயர்ந்த மொபைல் சீரிஸான Xiaomi 14 உடன் புதிய மாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. Xiaomi 14 சீரிஸில் Xiaomi 14, Xiaomi 14 Ultra என்று இரண்டு மாடல்கள் உள்ளன.
Xiaomi 14 மொபைல் 69,999 ரூபாய்க்கும், Xiaomi 14 Ultra மொபைல் 99,999 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் தான் குறித்த நிறுவனம் Xiaomi 14 சீரிஸில் Xiaomi 14 Civi என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
Xiaomi 14 Civi
Xiaomi 14 Civi போனானது, டாப் வேரியண்ட் 12ஜிபி+512ஜிபி ஆகும். இதன் விலை 47,999 ரூபாயாகும்.
இதற்கு குறைந்த வேரியண்ட் 8ஜிபி+256ஜிபி உடன் வருகிறது. இதன் விலை 42,999 ரூபாயாகும்.
மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த மொபைலை வாங்க நினைப்பவர்கள், பிளிப்கார்டில் வரும் ஜூன் 20ம் தேதி அன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும் விற்பனையில் வாங்கலாம்.
அதுமட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள Mi ஷோரூம்களிலும், Mi.com என்ற அதன் அதிகாரப்பூர்வ தளத்திலும் நீங்கள் இதனை வாங்கலாம்.
தள்ளுபடி என்ன?
Xiaomi 14 Civi மொபைலினை ஐசிஐசிஐ வங்கியின் கார்டு மூலம் வாங்கினால் உங்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதேபோல், நீங்கள் எக்ஸ்சேஞ் ஆப்பரில் இந்த மொபைலை வாங்கினால் 3 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும்.
இந்த மொபைலுக்கான முன்பதிவு பிளிப்கார்ட் தளத்தில் இன்று மதியம் 2 மணி முதல் தொடங்கியது.
மேலும், Mi.com இணையத்தளத்திலும் மற்றும் Xiaomi மொபைல்கள் கிடைக்கும் ஷோரூம்களிலும் நீங்கள் இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இதனை ஜூன் 19ம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு Xiaomi Watch 3 Active இலவசமாக வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
Xiaomi 14 Civi மொபைல் 6.55 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 1.5K ரெஸ்சோல்யூஷன் உடன் வருகிறது. இதன் அதிகபட்ச பிரைட்நஸ் 3000 nits ஆகும்.
இதில் Qualcomm Snapdragon 8s Gen 3 சிப்செட் உள்ளது. Xiaomi HyperOS உடன் வருகிறது வருகிறது.
மேலும், 4,700mAh பேட்டரி உடன் வருகிறது. 67W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் பின்புறம் வட்ட வடிவிலான கேமரா அமைப்பு உள்ளது. 50MP+50MP+12MP என்ற கேமரா அமைப்புடன் வருகிறது.
அதுமட்டுமின்றி முன்புறம் இரட்டை செல்ஃபி கேமரா உள்ளது. செல்ஃபி கேமரா அமைப்பு 32MP + 32MP உடன் வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |