இரண்டு செல்ஃபி கேமராவுடன் அறிமுகமாகும் Xiaomi 14 Civi மொபைல் முழு விபரம் இதோ!
சியோமி நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போனான Xiaomi 14 CIVI-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Xiaomi 14 Civi
சியோமி நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இப்போது இந்தியாவில் புதிய அம்த்துடன் Xiaomi 14 Civi ஐ வெளியிட்டுள்ளது. இது க்ரூஸ் ப்ளூ, மேட்சா க்ரீன் மற்றும் ஷேடோ பிளாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தி உள்ளது.
Xiaomi 14 சீரிஸில் உள்ள பிற மொபைல்களை போலவே Leica-பிராண்டட் 50-MP டிரிபிள் ரியர் கேமராக்களை இந்த மொபைல் கொண்டுள்ளது. இருந்தாலும் இது டூயல் ஃப்ரன்ட் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது.
இதற்கு 8GB + 256GB மற்றும் 12GB + 512GB ஆகிய 2 வேரியன்ட்ஸ்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இது இந்திய விலைப்படி ரூ.42,999 மற்றும் ரூ.47,999-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதை தவிர இது சிம் சப்போர்ட் கொண்ட புதிய Xiaomi 14 Civi மொபைலானது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HyperOS-ல் இயங்குகிறது. இந்த மொபைல் 6.55-இன்ச் 1.5K கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரஷ் ரேட் , 240Hz டச் சேம்ப்ளிங் ரேட் , 446ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் 3,000 nits பிரைட்னஸை கொண்டுள்ளது.
இது 12GB வரை LPDDR5 ரேம் மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் IceLoop கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. Xiaomi 14-ஐ போலவே, Xiaomi 14 Civi மொபைலும் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது.
இதன் பின்புறத்தில் 50MP லைட் ஃப்யூஷன் 800 இமேஜ் சென்சார் உடன் வருகிறது. இது தவிர, போனில் 50MP டெலிஃபோட்டோ கேமரா, 12MP அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
சியோமியின் இந்த போன் 2 ஃப்ரன்ட் கேமராக்களுடன் வருகிறது. 32MP பிரைமரி செல்ஃபி கேமரா மற்றும் 32MP அல்ட்ராவைடு செல்ஃபி கேமராவுடன் இந்த மொபைல் வருகிறது.இதில் இன்னும் பல அம்சங்கள் நிறைந்துள்ளன.
கனெக்டிவிட்டியை பொறுத்த வரை இந்த மொபைலில் 5G, Wi-Fi 6, NFC, ப்ளூடூத் 5.4, GPS, Galileo, GLONASS, Beidou, NFC மற்றும் USB Type-C போர்ட் உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த மொபைல் Dolby Atmos சப்போர்ட்டுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.
இதில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் AI-பேக்ட் ஃபேஸ் அன்லாக் சிஸ்டம் உள்ளது. மேலும் இந்த மொபைலில் 67W வயர்டு சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் கூடிய 4,700mAh பேட்டரி உள்ளது.
பூஜ்யத்தில் இருந்து பேட்டரி சார்ஜ் செய்ய துவங்கிய 30 நிமிடங்களுக்குள் 80% சார்ஜாகி விடும் அளவிற்கு சிறப்பம்சங்களை கொண்டு காணப்படகின்றது. வாடிக்கையாளர்கள் இதை வாங்குவதற்கு வரும் ஜூன் 20-ஆம் தேதி மதியம் 12:00 மணி முதல் Flipkart, Mi.com, Mi Home கடைகள் மற்றும் Xiaomi-ன் ரீடெய்ல் பார்ட்னர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இது தவிர பேங்க் கார்டுகள் மூலம் இந்த மொபைலை பணம் செலுத்தி வாங்கும் போது ரூ.3,000 தள்ளுபடியை பெறலாம். மேலும் Xiaomi 14 Civi மூன்று மாத யூடியூப் பிரீமியம் சந்தா மற்றும் ஆறு மாதங்களுக்கு 100GB கூகுள் ஒன்னுடன் வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |