கேவலமான உணவுகளில் முக்கிய இடத்தை பிடித்த இந்திய உணவு- சாப்பிட்டதுண்டா?
பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் வாழ்க்கை நடத்து மக்கள் பிடிக்காத உணவு எது என்று கேட்டால் அதிகமாக பாகற்காய் மற்றும் கத்தரிக்காய் என்று கூறுவார்கள்.
ஆனால் இது போன்றுபைங்கன் கத்தரி ஒரு ஊதா நிற காய்கறிகளில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.
ஆனால் இந்த காய்கறியை பல்வேறு உணவுகள் தயாரிப்பதற்கு மூலப்பொருளாக பயன்படுத்தலாம்.
இந்திய கேவலமான உணவு
அந்த வகையில், கத்தரிக்காயை கொண்டு செய்யப்படும் பர்தா மற்றும் சோக்கா என அழைக்கப்படும் உணவை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை “ஆலு பைங்கன்” என்றும் கூறப்படுகின்றது.
இந்த உணவு சமீபத்தில் இடம்பெற்ற "உலகின் மோசமான மதிப்பிடப்பட்ட உணவுகள்" ஒன்றாக தெரிவுச் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான பூரண விளக்கத்தை கீழுள்ள பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
பட்டியல் வெளியீடு
அண்மையில், ஆன்லைன் உணவு போர்ட்டல் டேஸ்ட் அட்லஸ், அதாவது "உலகின் முதல் 100 மோசமான தரமதிப்பீடு செய்யப்பட்ட உணவுகள்" பட்டியலை வெளியிட்டது.
இந்த பட்டியலில் “ஆலு பைங்கன்” என அழைக்கப்படும் உணவு 60வது இடத்தைப் பிடித்தது.
இந்த உணவை தயாரிப்பதற்கு உருளைக்கிழங்கு, பிரிஞ்சி / கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, மசாலாப் பொருட்கள் மற்றும் கொத்தமல்லி ஆகிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் குழம்பு வகையாகும்.
தவா ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடும் இந்த உணவிற்கு 5 இல் 2.7 ரேட்டிங் மட்டுமே கொடுக்கப்பட்டது. நம்மில் பலர் குழம்பை அதிகமாக விரும்பினால் இதனை ஏற்காமல் இருக்கலாம்.
முதல் இடம் பிடித்த உணவு
இதனை தொடர்ந்து ஐஸ்லாந்தைச் சேர்ந்த “ஹகார்ல்'” என அழைக்கப்படும் உணவு மிக மோசமான தரமதிப்பீடு செய்யப்பட்ட உணவுகளில் முதல் இடத்தை பிடித்தது.
இந்த உணவை சரியாக 3 மாதங்களுக்கு நொதித்தல் செயல்முறைக்கு உட்பட்ட சுறா இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனாலும் இந்த உணவில் கடுமையான சுவை உள்ளது. இதனை “ப்ரென்னிவின்” எனப்படும் ஒரு டூத்பிக்ஸில் பரிமாறிவார்கள்.
ஐஸ்லாந்தில் உள்ளவர்கள் அல்லது வெளியில் இருந்து சுவைப்பவர்கள் ஒரே தடவையில் பிடிக்காமல் போகலாம். இருந்தாலும் ஐஸ்லாந்தின் தேசிய சுவை இந்த உணவில் இருக்கின்றது.
வெளியிலிருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த உணவை விரும்புவதில்லை. மாறாக இந்த உணவில் சேர்க்கப்படும் முக்கிய பொருட்கள் அம்மோனியா உள்ள நபருக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம்.
இரண்டாம் இடம்
இதனை தொடர்ந்து, இரண்டாவது இடத்தை அமெரிக்காவைச் சேர்ந்த “ராமென் பர்கர்” என்ற உணவு பிடித்துள்ளது.
இது டிஷ் பர்கரை ஒரு ராமென் நூடுல் ரொட்டியுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.அத்துடன் இந்த உணவு இறைச்சி பேட்டியுடன் அடைக்கப்படுகிறது.
மூன்றாம் இடம்
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை ஜெருசலேமைச் சேர்ந்த “யெருஷல்மி குகேல்” என்ற உணவு பிடித்துள்ளது.
இந்த உணவு கேரமெலைஸ் செய்யப்பட்ட சர்க்கரை மற்றும் நூடுல்ஸ் கலந்த கேசரோல் சேர்த்து தயாரிக்கப்படும் உணவாகும்.
இந்த உணவை யூத விடுமுறை நாட்களில் மக்கள் சாப்பிட விரும்புவதாக கூறப்படுகின்றது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |