சத்துணவு முட்டையில் மிதந்த புழுக்கள் - கரூரில் அரேங்கேறிய அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில், தமிழ்நாட்டிஉல் உள்ள கரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் சத்துணவுடன் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் புழுக்களுடன், அழுகிய நிலையில் உள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டம் நாகனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் வழங்கப்படும் முட்டைகள் அழுகியும் புழுக்கள் ஆக்கிரமித்தும் உள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளிக்குச் சென்று இது தொடர்பாக வீடியோவையும் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
மேலும் புழுக்கள் நிறைந்த முட்டையை உண்ணும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அஞ்சும் பெற்றோர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கம் கேட்க முற்பட்டபோது பள்ளி தலைமை ஆசிரியர் நமது அழைப்பை ஏற்கவில்லை. இதுசம்பந்தமான வீடியோ காட்சிகளும் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றன.