உலகிலேயே மிகவும் ஏழ்மையான நாடு எது தெரியுமா?
என்னதான் நாம் அனுதினமும் மூன்று வேளை உணவிற்கும், அழகான உடைகளை உடுத்திக் கொண்டாலும் இது எதுவுமே இல்லாமல் இருக்கும் சில நாடுகள் இருக்கத்தான் செய்கிறது.
உலகில் பல நாடுகள் பணம் படைத்து செல்வந்த நாடாக இருந்தாலும், கோடிக்கணக்கான மக்கள் ஒரு வேளை உணவிற்காக அல்லாடும் நாடுகளும் இருக்கிறது. அப்படி வறுமையை மட்டுமே பார்த்து வரும் உலகின் ஏழ்மையான நாடுதான் புருண்டி நாடு. இந்த நாட்டைப் பற்றிய பல தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஏழ்மையான நாடு
மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள கடல் பரப்பற்ற ஒரு நாடுதான் புருண்டி. காங்கோ, ருவாண்டா, தான்சானியா போன்ற ஏழை நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள புருண்டி கடும் ஏழை நாடாக ஐ.நாவால் அறிவிக்கப்பட்டது.
உள்நாட்டுப் போர், உணவு பஞ்சம், வறுமை என பல மோசமான சூழலில் சிக்கித் தவிக்கிறது. 1 கோடியே 20 லட்சம் மக்கள் வாழும் இந்த புருண்டி நாட்டில் 80சதவீதமான மக்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் பிரிட்டனும் அமெரிக்காவும் இந்த நாட்டை ஆட்சி செய்து வந்தனர். இந்த நாடு சுதந்திரம் அடைந்த போது, பொருளாதார நிலை நன்றாக இருந்தது, ஆனால் 1996 ஆம் ஆண்டு முதல் நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது.
மேலும், இனக்கலவரம் ஏற்பட்ட பிறகு நாடு பொருளாதாரத்தில் பின்தங்கி ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் முதலிடத்திற்கு வந்தது.
அதுமட்டுமில்லாமல் இந்த நாட்டில் வாழும் மக்களின் ஆண்டு வருமானம் 180 டொலர்கள் தான். அங்கு எப்படி வேலை செய்தாலும் தினமும் 50 ரூபாய் சம்பாத்தியம் தான்.
புருண்டி நாடு மட்டுமல்ல உலகில் இருக்கும் பல நாடுகள் இன்னுமே முன்னேற்றமடையாமல் இருப்பது நிதர்சனமான உண்மை.