உலக மக்களின் ஆயுட்காலம் திடீர் குறைவு: எந்த நாட்டு மக்களுக்கு எத்தனை ஆண்டு தெரியுமா?
கொரோனா பரவல் காரணமாக இந்திய மக்கள் தங்களது ஆயுட்காலம் 2 வருடம் குறைந்துள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் இன்னும் கட்டுக்குள் வராமல் பல உயிர் சோதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதில் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே ஒரே தீர்வு என்று கூறப்பட்டு வரும் நிலையில், அந்தந்த நாட்டு அரசு மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றது.
ஏனெனில் இரண்டாவது அலையில் உயிர் பலி அதிகமாக இருந்த காரணத்தில் தற்போது மூன்றாவது அலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல நாடுகள் தடுப்பூசியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்நிலையில், கொரோனா சூழ்நிலைக்கு பின்பு மக்களின் ஆயுல் காலத்தில் இரண்டு ஆண்டுகள் குறைந்துள்ளதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் மக்கள்தொகை கல்வியிவல் சர்வதேச நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டள்ளது.
இதில் 2019- 20 காலகட்டத்தில் இந்தியாவில் ஆண்களின் உத்தேச ஆயுட்காலம் 69.5 ஆண்டுகளில் இருந்து 67.5ஆகவும், பெண்களின் உத்தேச ஆயுட்காலம் 72 ஆண்டுகளில் இருந்து 69.8ஆகவும் குறைந்துள்ளது.
இதற்கு காரணம் இந்தியாவில் 35 முதல் 79 வயது வரை அதிகப்படியான உயிரிழப்புகள் நிகழ்ந்ததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரை பொதுமக்களின் ஆயுட்காலம் ஓராண்டும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் இரண்டு ஆண்டுகளும், ஸ்பெயின் நாட்டில் 2.2 ஆண்டுகளும் உத்தேச ஆயுட்காலம் குறைந்துள்ளது.
உலகில் ஏற்படும் ஒவ்வொரு நோய் தொற்று தாக்குதலினால் பிறப்பு விகிதம் குறைந்து மக்களின் உத்தேச ஆயுட்காலம் குறைவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளார்.