உங்க பாஸ்போர்ட்டை வைத்து எத்தனை நாட்டிற்கு விசா இல்லாமல் செல்லலாம்? உலகில் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகள்
உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இந்தியா பின்னோக்கி சென்ற நிலையில், மூன்று ஆண்டுகளாக தனது முதல் இடத்தினை ஜப்பான் தக்க வைத்துள்ளது.
மிகவும் பயணத்திற்கு ஏற்ற பாஸ்போர்ட்களை கொண்ட உலக நாடுகளை பட்டியலிடும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Henley Passport Index) இரண்டு வருட கொரோனா தாக்கத்திற்கு பின்பு இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது.
குறித்த பட்டியல் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் வழங்கிய டேட்டாக்களின் பகுப்பாய்வைக் கொண்டும், ஒரு நாட்டின் பாஸ்போட்டை வைத்து எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தரவரிசை படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இந்த ஆண்டு பட்டியலில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய 2 நாட்டின் பாஸ்போட் வைத்திருப்பவர்கள், 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கபடும் நிலையில், முதலிடத்தினை தக்க வைத்துள்ளது.
இதில் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு 84வது இடத்திலிருந்த இந்தியா, இந்த ஆண்டு 90வது இடத்திற்கு சரிந்துள்ளது.
உலகின் மிக சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்கள்:
ஜப்பான், சிங்கப்பூர்: இந்த நாடுகளின் பாஸ்போட்டை வைத்து 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
ஜெர்மனி, தென் கொரியா: இந்த நாடுகளின் பாஸ்போட்டை வைத்து 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின்: இந்த நாடுகளின் பாஸ்போட்டை வைத்து 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
ஆஸ்திரியா, டென்மார்க்: இந்த நாடுகளின் பாஸ்போட்டை வைத்து 188 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல், சுவீடன்: இந்த நாடுகளின் பாஸ்போட்டை வைத்து 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
பெல்ஜியம், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து: இந்த நாடுகளின் பாஸ்போட்டை வைத்து 186 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
செக் குடியரசு, கிரீஸ், மால்டா, நோர்வே, யுனைட்டட் கிங்டம், அமெரிக்கா: இந்த நாடுகளின் பாஸ்போட்டை வைத்து 185 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
ஆஸ்திரேலியா, கனடா: இந்த நாடுகளின் பாஸ்போட்டை வைத்து 184 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
ஹங்கேரி: இந்த நாட்டின் பாஸ்போட்டை வைத்து 183 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
லிதுவேனியா, போலந்து, ஸ்லோவாக்கியா: இந்த நாடுகளின் பாஸ்போட்டை வைத்து 182 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.