ஒரு ப்ளேட் french fries இத்தனை ஆயிரம் ரூபாயா? அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தற்போதைய காலக்கட்டத்தில் உணவகங்கள் அதிகமாகியுள்ள நிலையில் மக்கள் அதிகமாக ஹோட்டல்களிலேயே சாப்பிட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அதிலும், வித்தியாசமான உணவுகளுக்கு இருக்கும் மவுசு எப்பொழுதும் தனி சுவை தான். அப்படி ஒரு காட்ஸ்லியான உணவை பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம்.
Crème dela Crème Pommes Frites என்று அழைக்கப்படும் ஒருவகை ஃப்ரென்ச் ஃப்ரைஸ் தான் அவை. இவை ஒரு ப்ளேட் 200 டாலராம்.

அதாவது 15,800 ரூபாய் எனக்கூறப்படுகிறது. என்ன சிறப்பு? நியூயார்க்கில் அமைந்திருக்கும் Serendipity 3 உணவகம் தான் அந்த உருளைக்கிழங்கு ஃப்ரைஸை தாயாரித்திருக்கிறது.
இவை அதிக விலையுர்ந்த உணவு என கின்னஸ் சாதனைகளாலும் அங்கீகாரம் பெற்றிருக்கிறது.
மேலும், உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட இனிப்பாக Frrrozen Haute Chocolate ice cream sundae திகழ்கிறது. காரணம் இதில் 23 கேரட் தங்கத் துகள்கள் போடப்பட்டிருக்கும். இந்த தங்கத்தூள்கள் தான் சிப்ஸையும் விலையுர்ந்ததாக மாற்றியிருக்கிறது.
