உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலான Icon of the Seas தன்னுடைய முதல் பயணத்தை மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கியுள்ளது.
இதன் ஒட்டுமொத்த நீளம் மட்டுமே 1200 அடிகள் ஆகும், ஏழு நாட்கள் தீவுகளுக்கு இடையே பயணத்தை மேற்கொள்ளும் இக்கப்பலின் முதல் பயணத்தை லியோனல் மெஸ்ஸி தொடங்கி வைத்துள்ளார்.
மொத்தம் 20 அடுக்குகளுடன் 7600 பயணிகள் வரை இக்கப்பலில் பயணிக்க முடியும்.
கப்பலின் உள்ளே ஆறு நீர்ச்சறுக்கு விளையாட்டு இடங்கள், ஏழு நீச்சல் குளம், திரையரங்கள், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள் என அனைத்து சொகுசு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
ராயல் கரீபியன் நிறுவனம் இக்கப்பலை உருவாக்க 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவானதாகவும், 900 நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.