மற்றுமொரு கின்னஸ் சாதனையை சாக்லேட்டை வைத்து தட்டி தூக்கிய அமெரிக்கா..! இதன் எடை தெரியுமா?
2500 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சாக்லேட் பாக்ஸ் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவில் மற்றுமொரு சாதனை
அமெரிக்காவிலுள்ள ரஸ்ஸல் ஸ்டோவர் என்கிற பிராண்ட் நிறுவனம் 2500 கிலோவுக்கு மேல் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சாக்கெட் பெட்டியை தயாரித்துள்ளது.
தயாரிக்கபட்டுள்ள சாக்லேட் பாக்ஸ்க்குள் சுமார் 9 வகையான சாக்லேட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கின்னஸ் சாதனைபடி பார்க்கையில்,2,547.50 கிலோ எடையுள்ள பிரமாண்டமான இந்த சாக்லேட் பாக்ஸை ஸ்ஸல் ஸ்டோவர் (அமெரிக்கா) என்ற நிறுவனம் முறியடித்துள்ளது.
இதனை கண்டாமிருகத்தின் எடையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சமமாகின்றது.
இந்த சாக்லேட் பாக்ஸ் 9.27 மீ x 4.69 மீ x 0.47 மீ (30.43 அடி x 15.41 அடி x 1.55 அடி) என அளவிடப்பட்டுள்ளது.
உலக சாதனை பராமரிப்பு அமைப்பின் கருத்து
அத்துடன் கடந்த ஏப்ரல் 17ம் தேதி அமெரிக்காவின் மிசோரி, கன்சாஸ் நகரில் இது காட்சிபடுத்தப்பட்டுள்ளது என உலக சாதனை பராமரிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த சாக்லேட் பெட்டிக்குள் கேரமல், தேங்காய் கொத்து, பழம் மற்றும் நட்ஸ் கேரமல், வேர்க்கடலை கொத்து, பெக்கன் டிலைட், ராஸ்பெர்ரி கிரீம், ஸ்ட்ராபெரி கிரீம், டோஃபி மற்றும் ட்ரஃபுல், அத்துடன் சாக்லேட் மூடப்பட்ட பாதாம் ஆகிய பொருட்கள் அதிகமாக சேர்க்கபட்டுள்ளது.
இவ்வளவு சிறப்பம்சம் இருந்தும் குறைந்தபட்ச எடையை ரஸ்ஸல் ஸ்டோவர் 205 துண்டுகள் நிரப்பியது.
இதனை தொடர்ந்து இதிலுள்ள சாக்லேட்டுகளை எடுத்து எடை போட்ட போது அதன் சிறிய துண்டு சுமார் 4.53 கிலோ எடை இருந்துள்ளது.
அத்துடன் இதில் பெரிய துண்டு ள் 16 கிலோவிற்கும் (35 பவுண்டுகள்) எட்டியுள்ளது என தகவல் தெரிவிக்கின்றன.
இதன் போது எடுக்கப்பட்ட கின்னஸ் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், “ இப்படியெல்லாமா சாதனை செய்வார்கள்? ” என பிரமிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |