உலகிலேயே மிகவும் உயரமான சினிமா தியேட்டர் இதுதானாம்- எங்கு உள்ளது? சிறப்பு அம்சம் என்ன தெரியுமா?
உலகிலேயே முதல் முறையாக 11,562 அடி உயரத்தில் டிஜிட்டல் திரையரங்கம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் யூனியன் பிரதேசம், லடாகில் லேவின் பல்டன் பகுதியில் உலகிலேயே மிக உயரமான மொபைல் டிஜிட்டல் திரையரங்கம் கட்டப்பட்டுள்ளது. திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவத்தை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்வதற்காக, 11,562 அடி உயரத்தில் இந்த மொபைல் தியேட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், இங்கு ஆண்டு முழுதும் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இங்கு வசிக்கும் மக்களின் பொழுது போக்குக்கு திரை அரங்குகள் இல்லாத நிலை உள்ளது. கடும் குளிர் பிரதேசம் என்பதால் திரை அரங்குகளை அமைத்து அதை பராமரிப்பது சவாலாக உள்ளது.
இந்த நிலையில், லேவில் உள்ள என்.எஸ்.டி., மைதானத்தில் பிக்சர் டைம் டிஜிப்ளேக்ஸ் என்ற நிறுவனம் நடமாடும் டிஜிட்டல் திரை அரங்கை அமைத்துள்ளது.
இது, கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரத்து 562 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக உயரத்தில் இயங்கும் திரை அரங்கம் என்ற பெருமையை இது பெறுகிறது.
