1,140 அடி.. ஒட்டு மொத்த சிலந்தியும் ஒரே வலைக்குள்! பிரம்மித்து போன விஞ்ஞானிகள்
அல்பேனிய-கிரேக்க எல்லையில் உள்ள 1,140 அடி உயர குகைக்குள் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த குகையில், ஏறதாழ 1,11,000 சிலந்திகள் இணைந்து செழித்து வளர்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த குகை நுழைவாயிலுக்கு அருகில் ஒரு குறுகிய, தாழ்வான கூரை பாதையின் சுவரில் 106 சதுர மீட்டர் நீளமுள்ள வலை நீண்டுள்ளது.

குகையின் இருள் சூழ்ந்த பகுதியில், ஆயிரக்கணக்கான புனல் வடிவ வலைகள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு ஒரு பட்டு கூடாரம் போல பரந்து விரிந்திருக்கும் சிலந்தி வலையை கண்டு விஞ்ஞானிகள் மெய்சிலிர்த்து போயுள்ளனர்.

இரண்டு வகை சிலந்திகள்
இந்த பிரமாண்ட குகைக்குள், சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் சிலந்திகள் ஒன்றாக வசிக்கும் ராட்சத வலையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட சிலந்தி வலைகளிலேயே இதுதான் மிகப்பெரியது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பொதுவாக தனித்து வாழும் குணம் கொண்ட, மற்றும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு சிலந்தி இனங்கள் இங்கு ஒரே வலையில் சமாதானமாக வாழ்ந்து வருவது விஞ்ஞானிகளை மேலும் ஆச்சியத்தில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |